SSC Job: 737 கான்ஸ்டபிள் பணியிடங்கள்.. டிரைவிங் லைசன்ஸ் இருக்கா? எஸ்எஸ்சி வெளியிட்ட சூப்பர் சான்ஸ்
சென்னை: மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் (எஸ்.எஸ்.சி) 737 கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். சம்பளத்தை பொறுத்தவரை தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.69 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்ற விவரங்களை இங்கு காணலாம்.
மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையமான எஸ்.எஸ்.சி மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பணியை மேற்கொண்டு வருகிறது. மத்திய உள்துறை அமைச்சக கட்டுப்பாட்டில் வரும் காவல்துறை பிரிவு பணியிடங்களும் எஸ்.எஸ்.சி வாயிலாகவே நிரப்பப்பட்டு வருகிறது.

அந்த வகையில், கான்ஸ்டபிள் (டிரைவர்) பணியிடங்களை நிர்ப்புவதற்கான அறிவிப்பினை எஸ்.எஸ்.சி வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி என்ன? வயது வரம்பு என்ன என்பன உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
* கான்ஸ்டபிள் (ஓட்டுநர் - ஆண்) - 654
* கான்ஸ்டபிள் (ஓட்டுநர்) முன்னாள் ராணுவத்தினர் - 83
கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் ஹெவி வாகனங்கள் ஓட்டுவதற்கு உரிய லைசன்ஸ் வைத்து இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
01.07.2025 தேதியின்படி, 21 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அதாவது, 02.07.1995 க்கு முன்பாகவோ 01.07.2004 பிறகோ பிறந்தவராக இருத்தல் கூடாது. எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு வயது உச்ச வரம்பில் 5 ஆண்டுகள் தளர்வு உண்டு. ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும். முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிகளின் படி சலுகைகள் வழங்கப்படும்.
சம்பளம் எவ்வளவு?
தேர்வு செய்யப்படும் தேர்வர்களுக்கு 7-வது ஊதிய கமிஷன் பே லெவல் 3-ன் படி சம்பளம் வழங்கப்படும். அதாவது, மாதம் ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்படும். தேர்வு முறையை பொறுத்தவரை கணினி வழியிலான ஆன்லைன் தேர்வு, உடல் தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வுக்கட்டணம்
தேர்வு மையங்களை பொறுத்தவரை நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் தேர்வு நடைபெறும். தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, வேலூர், புதுவை ஆகிய நகரங்களில் தேர்வு நடைபெறும். விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.
* விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கிய நாள்: 24.09.2025 ஆகும்.
* விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.10.2025 at 11.00 PM ஆகும்.
* தேர்வு நடைபெறும் மாதம்: டிசம்பர் 2025/ ஜனவரி 2026 ஆகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/Notice_of_DPCD_2025.pdf
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications