தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும்! ரூ.39,900 சம்பளம்.. அறநிலையத்துறை வெளியிட்ட அறிவிப்பு
சென்னை: அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயிலில் வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். சம்பளத்தை பொறுத்தவரை மாதம் 40 ஆயிரம் வரை வழங்கப்படும்.
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயிலில் வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கோவை மாவட்டம் அவினாசி சாலையில் உள்ள இந்த கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலங்களில் ஒன்றாக உள்ளது.

அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயில் என்பதால், இந்த கோயிலில் பணிபுரிவர்களுக்கு கை நிறைய சம்பளம்,சலுகைகள் உள்ளிட்டவை கிடைக்கின்றன. இதனால், அறநிலையத்துறை வேலைக்கு தேர்வர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில்தான் தற்போது கோயிலில் காலியாக இருக்க கூடிய இரண்டு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
ஓதுவார்: 01
இரவுக்காவலர்; 01
என மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி
கல்வித்தகுதியை பொறுத்தவரை தமிழில் எழுத படிக்க தெரிந்து இருக்க வேண்டும். ஓதுவார் பணிக்கு சமய நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் அல்லது ஏனைய யாதொரு நிறுவனங்கள் நடத்தும் மூன்றாண்டு பாடப்பிரிவை முடித்ததற்கான தேவாரப்பள்ளி வழங்குகின்ற சான்றிதழை பெற்று இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 01.07.2025 தேதிப்படி 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
சம்பளம் எவ்வளவு?
சம்பளத்தை பொறுத்தவரை ஓதுவார் பணிக்கு மாதம் ரூ.12,600- 39,900 வரை வழங்கப்படும். இரவுக்காவலர் பணிக்கு ரூ.11,600- ரூ.36,800 வரை வழங்கப்படும்.
தேர்வர்கள் தேர்வு அறிவிப்பினை படித்து உறுதி செய்து கொண்ட பிறகு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வரும் 24.01.2026 கடைசி நாளாகும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படும். விண்ணப்ப படிவம் கோயில் அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php
-
IT Jobs: அனுபவம் வேண்டாம்.. நாளை ஆன்லைனில் இண்டர்வியூ! எச்சிஎல் தரும் சூப்பர் வேலை -
AIIMS Jobs: எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை! 2,668 காலியிடங்கள்! 10 டூ டிகிரி போதும்.. தேர்வர்கள் மிஸ் பண்ணிடாதீங்க -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்!












Click it and Unblock the Notifications