Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெண்களுக்கு மட்டும்.. மாதம் ரூ.32,000 சம்பளம்.. குவைத்தில் வேலை வேண்டுமா? தமிழக அரசு முக்கிய தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் ஓஎம்சிஎல் நிறுவனம் சார்பில் குவைத்தில் பணி செய்வதற்கான ஆட்கள் தேர்வு நடக்கிறது. 10ம் வகுப்பு அல்லது அதற்கு கீழ் வகுப்பு படித்திருக்கும் பெண்கள் இதற்கு விண்ணப்பம் செய்யலாம். மாதசம்பளமாக ரூ.29,500 முதல் ரூ.32,000 வரை வழங்கப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து ஏராளமானவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று பணியாற்றி வருகின்றனர். தனியார் ஏஜென்ட்டுகள் மூலம் வெளிநாடு செல்லும் சிலர் அங்கு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக இளைஞர்கள், பெண்கள் அதிக சிரமங்களை வெளிநாடுகளில் சந்திக்கின்றனர்.

இதனால் வெளிநாடு பணிக்கு செல்வோர் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். இந்நிலையில் தான் தமிழக அரசு சார்பில் வெளிநாடு பணிக்கு ஆட்கள் அனுப்பும் முறை உள்ளது. இது பலருக்கும் இன்னும் தெரியாமல் இருக்கலாம். ஆனால் இது உண்மை.

 Tamil Nadu government OMCL recruitment for 500 vacancy in Kuwait

அதாவது தமிழ்நாடு அரசின் வெளிநாடுவாழ் தமிழர் நலவாழ்வுத்துறையின் கட்டுப்பாட்டில் ஓஎம்சிஎல் எனும் ‛ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் லிமிடெட்' (Overseas Manpower Corporation Limited or OMCL) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு இந்த நிறுவனம் பணிக்கு ஆட்களை அனுப்பி வருகிறது. இந்நிலையில் தான் தற்போது ‛ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் சார்பில் புதிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு:

குவைத்தில் வீட்டு வேலை (Housmaid) செய்வதற்கு 500 பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பம் செய்ய முடியும். விண்ணப்பம் செய்வோர் 10ம் வகுப்பு அல்லது அதற்கு குறைவான படிப்பு படித்திருப்பவர்கள் பணிக்கு விண்ணப்பம் செய்யலாம். இவர்கள் 30 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். பணிக்கு தேர்வாகும் பட்சத்தில் மாதம் குறைந்தபட்சமாக ரூ.29,500ம், அதிகபட்சமாக ரூ.32,000 வரையும் சம்பளமாக வழங்கப்படும். இதுதவிர தங்குமிடம், சாப்பாடு, விமான டிக்கெட் சலுகைகளும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அக்டோபர் மாதம் 17 ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். அதாவது தங்களின் சுயவிபரங்களை பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் [email protected] என்ற இ-மெயிலுக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் 2250 5886 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பேசலாம்.

இந்த பணிக்கான நேர்க்காணல் என்பது Overseas Manpower Corporation Ltd. No.32, Thiruvika Industrial Estate, guindy, Chennai என்ற இடத்தில் நடத்தப்படும். நேர்க்காணலுக்கான தேதி என்பது பின்னர் அறிவிக்கப்பட உள்ளது என தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here

பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+