போக்குவரத்து துறையில் மிகப்பெரிய மாற்றம்.. தமிழ்நாடு இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. அரசின் மாஸ்டர்பிளான்
சென்னை: வார இறுதிக்குள் தமிழ்நாட்டில் 600 போக்குவரத்து ஊழியர்கள் ஓய்வு பெற போகின்றனர்.
சமீபத்தில் தென் தமிழ்நாட்டை சேர்ந்த பெரும்பாலான அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் அளிக்கப்பட்டன. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு இந்த பலன்கள் அளிக்கப்பட்டது.

340 போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ரூ. 111 கோடி மதிப்புள்ள ஓய்வூதிய பலன்கள் நேற்று வழங்கப்பட்டது. திருநெல்வேலியில் 98 ஊழியர்கள் 18 வாரிசுகள், தூத்துக்குடியில் 40 ஊழியர்கள், 8 வாரிசுகள், நாகர்கோவிலில் 159 ஊழியர்கள், 17 வாரிசுகளுக்கு ரூ. 111 கோடி மதிப்புள்ள ஓய்வூதிய பலன்கள் வழங்கப்பட்டது.
இவர்கள் ஓய்வு பெற்றது போலவே இந்த வார இறுதிக்குள் தமிழ்நாட்டில் மேலும் 600 ஊழியர்கள் ஓய்வு பெற போகின்றனர். அதன்படி தமிழ்நாட்டில் மாநகர போக்குவரத்து கழகங்கள், அரசு விரைவு போக்குவரத்து கழகங்கள் என்ற பிரிவுகளுக்கு கீழ் மொத்தம் 8 போக்குவரத்து கழகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதில் இந்தியாவிலேயே அதிகமாக தமிழ்நாட்டில்தான் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மொத்தமாக தமிழ்நாட்டில் 20,127 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் தினசரி மட்டும் 18 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் பணியாளர்கள் என்ற வகையில் 1.16 லட்சம் பேர் பணியாற்றி வருகிறார்கள். டிரைவர்கள், நடத்துனர்கள் இல்லாமல் மற்ற ஊழியர்களையும் சேர்த்து இத்தனை பேர் பணியாற்றி வருகிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையில்தான் வார இறுதிக்குள் தமிழ்நாட்டில் மேலும் 600 ஊழியர்கள் ஓய்வு பெற போகின்றனர். இவர்களுக்கான பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி விரைவில் இதற்கான பணியிட அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் 1,44,818 பேர் 2015ல் போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி வந்தனர். அந்த எண்ணிக்கை தற்போது 1.16 லட்சம் என்ற அளவில் குறைந்துவிட்டது. இதனால் ஏற்கனவே போக்குவரத்து ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. இந்த நிலையில்தான் கடந்த சில வருடங்களிலும், தற்போதும் காலியாகும் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது என்று போக்குவரத்து துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பெரும்பாலான இளைஞர்களுக்கு இதனால் வேலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு இப்போது ஓய்வு பெறும் நபர்களுக்கான பலன்கள் உடனுக்குடன் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புதிய பேருந்துகள்: தமிழ்நாட்டில் அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சிறப்பாக செயல்பட்டாலும் பேருந்துகள் அவ்வளவு சிறப்பானதாக இருக்காது. கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் அதிநவீன பேருந்துகள் போக்குவரத்துக்கு பயன்படுகின்றன.
ஆனால் தமிழ்நாட்டில் அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சார்பாக நவீன பேருந்துகள் வாங்கப்படுவது குறைவாகவே உள்ளது. கர்நாடகாவில் இருக்கும் அரசு விரைவு பேருந்துகள் வேற லெவல் தரத்தில் உள்ளன.
உதாரணமாக கர்நாடகாவின் ஐராவத் போன்ற பேருந்துகள் தனியாரை விட அதிக வசதி கொண்டதாக மக்கள் விரும்பும் விரைவு பேருந்துகளாக உள்ளன. இந்த நிலையில்தான் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சார்பாக விரைவு பேருந்துகளில் அதிரடி மாற்றங்களை செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
தமிழ்நாட்டில் விரைவு போக்குவரத்து பேருந்துகளில் இருக்கும் குறைகளை சரி செய்ய முடிவு செய்துள்ளனர். அதன்படி, அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் 200 புதிய படுக்கை மற்றும் இருக்கை வசதி பேருந்துகளை வாங்க திட்டமிட்டுள்ளது












Click it and Unblock the Notifications