அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர் பணியிடங்கள் நேரடியாக நியமனம்: அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டம்
அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர் பணியிடங்கள் நேரடியாக நியமிக்கப்படுவர் என அறிவித்துள்ளார் அமைச்சர் சிவசங்கர்.
சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர் பணியிடங்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் நேரடியாக நியமனம் செய்யப்படுவர் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு இன்றியமையாத பொது போக்குவரத்து சேவைகளை தினந்தோறும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்கள் வழங்கி வருகின்றன. அனைத்து அரசு போக்குவரத்துக்கழகங்களிலும் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்பிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற அறிவிப் பினை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் தமிழ்நாடு லிமிடெட்டில் 685 ஓட்டுனர் உடன் நடத்துனர் (டிரைவர் கம் கண்டக்டர்) பணியிடங்கள் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் (கும்பகோணம்) லிமிடெட்டில், 122 ஓட்டுனர் பணியிடங்களையும் நேரடி நியமனம் மூலம் அதாவது வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் செய்தித்தாள்களில் விளம்பரம் செய்து நிரப்பிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசு விரைவு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனரால் ஓட்டுனர் உடன் நடத்துனர் பணியிடங்களுக்கு தேவையான கல்வித்தகுதி, வயது மற்றும் பிற தகுதிகள் பெற்ற தகுதிவாய்ந்த நபர்களின் மூப்பு பட்டியல் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களிலிருந்து பெறப்படும். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம், கும்பகோணம் மேலாண் இயக்குனர் அவர்களால், ஓட்டுனர் பணியிடங்களுக்குத்தேவையான கல்வித்தகுதி, வயது மற்றும் பிற தகுதிகள் பெற்ற தகுதி வாய்ந்த நபர்களின் மூப்பு பட்டியல் அப்போக்குவரத்துக்கழக வட்டார எல்லைக்குட்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலிருந்து பெறப்படும்.
மேலும், ஓட்டுனர் உடன் நடத்துனர் மற்றும் ஓட்டுனர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் அந்தந்த போக்குவரத்துக் கழகங்களால் செய்தித்தாள் மூலம் விளம்பரம் செய்யப்பட்டு தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து இணையவழியில் விண்ணப்பங்கள் பெறப்படும். அவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்களில் இருந்து தகுதி வாய்ந்த நபர்களை தேர்வு செய்வதற்காக அந்தந்த மேலாண் இயக்குனர்களால் குழு அமைக்கப்பட்டு, அக்குழு ஓட்டுனர் உடன் நடத்துனர் மற்றும் ஓட்டுனர் பணியிடங்களுக்கான நபர்களை, சாலைப்போக்குவரத்து நிறுவனத்தின் உதவியுடன் தற்போதுள்ள அரசு விதிமுறைகளின்படி தேர்வு செய்வார்கள். இதன் மூலம், பொதுமக்களுக்கான பொது போக்குவரத்து சேவைகள் மேம்படும். இவ்வாறு அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications