ரூ.25,000 முதல் ரூ.50,000 மாத சம்பளம்.. சென்னையிலேயே அரசு வேலை.. விண்ணப்பம் செய்வது எப்படி?
சென்னை: தமிழ்நாடு ஸ்டார்ட்அப் அண்ட் இன்னோவேஷன் மிஷனில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிகிரி, பட்டமேற்படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்து ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையிலான சம்பளத்தில் சென்னையிலேயே அரசு வேலையை பெற முடியும்.
தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் தமிழ்நாடு ஸ்டார்ட்அப் அண்ட் இன்னோவேஷன் மிஷன் (Tamil Nadu Startup And Innovation Mission OR TANSIM) உள்ளது. இது தமிழ்நாடு அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.
இங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

காலியிடங்கள் எத்தனை?
தமிழ்நாடு ஸ்டார்ட்அப் அண்ட் இன்னோவேஷன் மிஷனில் ப்ராஜெக்ட் அசோசியேட் பிரிவில் மொத்தம் 13 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதன்படி Project Associate - Fablabs - Tech Assistant பிரிவில் 3, Project Associate - Investment Initiatives பிரிவில் 2, Project Associate - Incubation & Acceleration பிரிவில் 1, Project Associate - Regional Startup Hub பிரிவில் 3, Project Associate - Community Initiatives பிரிவில் ஒன்று, Project Associate - Project Management Unit பிரிவில் 3 என மொத்தம்

கல்வி தகுதி என்ன?
விண்ணப்பம் செய்ய விரும்புபவர்கள் மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் பட்டப்படிப்பு அல்லது பட்ட மேற்படிப்பை முடித்திருக்க வேண்டும் என பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாத சம்பளம் என்ன?
பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை கிடைக்கும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. விண்ணப்பதாரர்கள் Startuptn.in இணையதளம் சென்று டிசம்பர் மாதம் 18 ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

சென்னையில் பணி
விண்ணப்பம் கட்டணமாக எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. இவ்வாறு விண்ணப்பம் செய்பவர்கள் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டு Technical Round மற்றும் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். 3 ஆண்டுக்கான ஒப்பந்த பணி என்பதால் தேர்வு கிடையாது.தேர்வாகும் நபர்களுக்கு சென்னையிலேய பணி வழங்கப்பட உள்ளது.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
டிசிஎஸ், இன்போசிஸ் தான் இப்படி என்றால்.. நீங்களுமா..? டெக் ஊழியர்கள் மொத்தமாக கைவிடப்பட்டனர்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு











Click it and Unblock the Notifications