IT JOBS: ஜனவரி 10ம் தேதி இண்டர்வியூ.. டிசிஎஸ் ஐடி நிறுவனம் முக்கிய அறிவிப்பு.. பெங்களூரில் பணி
பெங்களூர்: முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் சார்பில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ ஜனவரி 10ம் தேி காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது. தேர்வாகும் நபர்கள் பெங்களூரில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
டாடா குழுமத்தை சேர்ந்த ஐடி நிறுவனமாக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) செயல்பட்டு வருகிறது. சென்னை, பெங்களூர், புனே உள்பட பல்வேறு முக்கிய நகரங்களில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் இருந்து சேல்ஸ்போர்ஸ் (Salesforce) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கான தகுதிகள் பற்றி இங்கே பார்க்கலாம்.
சேல்ஸ்போர்ஸ் பணியை பெற விரும்புவோர் கல்லூரி படிப்பை முடித்திருக்க வேண்டும். ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி அல்லது இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும். அதேபோல் சேல்ஸ் கிளவுட் (Sales Cloud), சர்வீஸ் கிளவுட் (Service Cloud) உள்ளிட்ட ஸ்கில்செட் இருக்க வேண்டும்.
மேலும் சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 4 ஆண்டும், அதிகபட்சமாக 10 ஆண்டும் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். திறமை, பணி அனுபவம் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்படும்.
இந்த பணிக்கான இண்டர்வியூ ஜனவரி 10ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை பெங்களூரில் உள்ள டிசிஎஸ் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் தேர்வாகும் நபர்கள் பெங்களூரில் உள்ள டிசிஎஸ் அலுவலகத்திலேயே நியமனம் செய்யப்பட உள்ளனர்.
இண்டர்வியூவுக்கு செல்வோர் Resume, அரசு சார்பில் வழங்கப்பட்ட ஏதாவது ஒரு அடையாள அட்டை மற்றும் அதன் ஜெரராக்ஸ், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ உள்ளிட்டவற்றை வைத்திருக்க வேண்டும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை.. 27,000 சம்பளம்.. 8ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications