அப்ளை பண்ணுவதில் சிக்கலா? TNPSC குரூப் 2, 2ஏ தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு! அரசின் அடடே அப்டேட்.!
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் நாளை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் காரணங்களினால் இணைய வழியாக TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கு இயலவில்லை என தேர்வர்கள் தெரிவித்ததால் தேர்வர்கள் விண்ணப்பிப்பதற்கும் மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்துவதற்கும் நாளை வரை கால தீட்டிப்பு வழங்கப்படுகிறது என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு பணிகளுக்கு ஆட்கள் சேர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி செயல்பட்டு வருகிறது. ஏஓ முதல் ஆர்டிஓ வரை குரூப் 1 முதல் குரூப் 8 வரை பல்வேறு தேர்வுகளை நடத்தி பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

அந்த வகையில் 2024ஆம் ஆண்டு காலியாக உள்ள உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், வனவர் உள்ளிட்ட குரூப் 2 பதவிகளுக்கு 507 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.
இதே போல உதவியாளர், நேர்முக உதவியாளர், கணக்கர் உள்ளிட்ட பல்வேறு குரூப்பு 2 ஏ பதவிகளில் சுமார் 1820 காலி பணியிடங்கள் என மொத்தமாக 20327 காலி பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த ஜூன் 20ஆம் தேதி வெளியிட்டிருந்தது. குரூப் 2 மற்றும் 2 ஏ முதல் நிலை தேர்வுகள் வருகிற செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து தேர்வர்கள் பலரும் ஆர்வத்துடன் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து வந்தனர்.
www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும், 19ஆம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று கடைசி நாள் எனவும் அறிவித்திருந்தது. இதேபோல ஏற்கனவே விண்ணப்பித்த தேர்வர்கள் தங்களது விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்ய 24ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இதன் மூலம் தேர்வர்கள் தங்கள் இணையவழி விண்ணப்பத்தில் உள்ள விவரங்களை திருத்தம் செய்யலாம், கால அவகாசம் நிறைவடைந்த பிறகு விண்ணப்பத்தில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்ய அனுமதிக்கப்படாது என தெரிவித்திருந்தது.
இந்நிலையில் கடைசி நாளான இன்று ஏராளமான தேர்வர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வந்தனர். இந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விண்ணப்பிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில் தொழில்நுட்பக் காரணங்களினால் இணைய வழியாக TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கு இயலவில்லை என தேர்வர்கள் தெரிவித்ததால் தேர்வர்கள் விண்ணப்பிப்பதற்கும் மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்துவதற்கும் 20.07.2024 11.59 pm வரை கால தீட்டிப்பு வழங்கப்படுகிறது என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,"தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்.B.2024 நாள் 20.062024 இன் வாயிலாக ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு II (தொகுதி II மற்றும் IIA) பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கு இணைய வழி விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் மற்றும் நேரம் 19.07.2024 11.50 pm என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தொழில்நுட்பக் காரணங்களினால் இணைய வழியாக விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கு இயலவில்லை என தேர்வர்கள் தெரிவித்ததால் தேர்வர்கள் விண்ணப்பிப்பதற்கும் மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்துவதற்கும் 20.07.2024 11.59 pm வரை கால தீட்டிப்பு வழங்கப்படுகிறது." என கூறப்படுகிறது. எனவே தேர்வர்கள் நாளை வரை குரூப் - 2 தேர்வுக்கு விண்ணப்பிக்கவும், தேர்வு கட்டணம் செலுத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications