இது தான் மதுரை ஜோஹோ ஆபிஸ்.. ஐடி நிறுவனமா? நட்சத்திர விடுதியா.. வாவ் சொல்ல வைத்த சூப்பர் தகவல்
மதுரை: இந்தியாவின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனங்களில் ஒன்றான ஜோஹோ (Zoho) மதுரை கப்பலூரில் 40 ஏக்கர் பரப்பளவில் கிளை அலுவலகத்தை அமைத்து வருகிறது. இந்நிலையில மதுரை ஜோஹோ அலுவலகம் சாப்ட்வேர் நிறுவனமா நட்சத்திர விடுதியா என்கிற அளவில் புதிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
இந்தியாவின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனங்களில் ஒன்றான ஜோஹோ (Zoho) உலகம் முழுவதும் கிளைகளை கொண்டு செயல்படுகிறது. அதன் சிஇஒவான ஸ்ரீதர் வேம்பு அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் இருந்து சொந்த ஊரான தென்காசி மாவட்டத்திற்கு திரும்பி, அங்கிருந்தபடியே பணிகளை செய்து வருகிறார். தென்காசி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் வசித்து வரும் ஸ்ரீதர் வேம்பு, தன் கிராமத்தை சுற்றியுள்ள கிராமங்களில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க பல்வேறு பணிகளை செய்து வருகிறார்.

இதுஒருபுறம் எனில் ஜோஹோ (Zoho) நிறுவனம், சென்னை, மும்பை, பெங்களூர் போன்ற மெட்ரோ நகரங்களை தாண்டி, இந்தியாவின் சிறு நகரங்கள் மற்றும் இரண்டாம் நிலை நகரங்களிலும் கிளைகளை ஆரம்பித்து வருகிறது. அந்த வகையில் ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு சிலிக்கான், மதுரை கப்பலூரில் 40 ஏக்கர் பரப்பளவில் கிளை அலுவலகத்தை அமைத்து வருகிறார். இந்த கிளை திறக்கப்பட்ட பின்னர் சுமார் 1100 பேருக்கு வேலை கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

சென்னையில் ஐடி நிறுவனங்கள் ஏராளமாக கிளை பரப்பிவிட்ட நிலையில், மதுரையில் தற்போது தான் தொழில் நுட்ப நிறுவனங்கள் தற்போது தான் அதிக அளவில் உருவாகி வருகின்றன. அந்த வகையில் ஜோஹோ (Zoho) நிறுவனம் கப்பலூரில் ஆரம்பிக்க உள்ள நிலையில் ஏராளமானோர் வேலைவாய்ப்பு பெருவார்கள் என்பதால், அதை பற்றிய புதிய தகவல்கள் பலத்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில மதுரை ஜோஹோ அலுவலகம் சாப்ட்வேர் நிறுவனமான நட்சத்திர விடுதியா என்கிற அளவில் புதிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. நட்சத்திர விடுதிகள் அறைகள் எப்படி இருக்குமோ, அந்த அளவிற்கு ஜோஹோ நிறுவன அறைகள் அற்புதமாக உள்ளன. இந்த புகைப்படங்களை மதுரை மக்கள் ஆச்சர்யத்துடன் பார்க்கிறார்கள்..

இது ஒருபுறம் எனில் Optisol மென்பொருள் நிறுவனம் தங்களது கிளையை வடபழஞ்சி தகவல் தொழில் நுட்ப பூங்காவில் தனது கிளையை 8 ஏக்கர் பரப்பளவில் அமைக்கிறது. இதன் மூலம் 2000 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. இதுவரை 8 நிறுவனங்கள் வட பழஞ்சி தகவல் தொழில் நுட்ப பூங்காவில் அவர்களது கிளை அலுவலத்தை அமைத்துள்ளதாக கூறப்படுகிறது.
மதுரையில் பல்வேறு ஐடி நிறுவனங்கள் வரும் காலத்தில் வந்தால் நிறைய மாற்றங்கள் ஏற்படும். உள்கட்டமைப்பு ரீதியாகமதுரையில் பல்வேறு மாற்றங்கள் செய்ய வேண்டியது அவசியம் ஆகும். தற்போதைய நிலையில், மதுரையில் பெரிய நிறுவனங்கள், மிகப்பெரிய வேலைவாய்ப்பை தரும் நிறுவனங்கள் என்று சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்பது வருத்தமான விஷயம்.












Click it and Unblock the Notifications