6,244 + 1,933.. தமிழ்நாட்டில் அரசு வேலையில் சேர விரும்புவோருக்கு இந்த மாதம் முக்கியமான மாதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சியில் 1,933 காலிப்பணியிடங்களும், குரூப் 4 தேர்வின் மூலம் 6,244 காலிப் பணியிடங்களும் என மொத்தம் 8,177 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எனவே அரசு வேலையில் சேர விரும்புவோருக்கு இந்த மாதம் முக்கியமான மாதம் ஆகும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி அரசு வேலையில் சேரலாம்.

தமிழ்நாட்டில் அரசு வேலையில் சேர விரும்புவோருக்கு இந்த மாதம் மிக முக்கியமான மாதம் ஆகும். இன்றைய தேதிக்கே அரசு வேலையில் சேர பல லட்சம் பேர் விண்ணப்பித்திருப்பார்கள். ஆனால் இன்னமும் விண்ணப்பிக்காமல் பலர் இருக்கிறார்கள். அப்படி விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பித்து விடுங்கள். அரசு வேலையை பொறுத்தவரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதுதவிர மகளிருக்கு இடஒதுக்கீட வழங்கப்படுகிறது.

This month is an important month for those who want to join government jobs in Tamil Nadu

தற்போதைய நிலையில் பெரும்பாலான அரசு பணிகளில் ஏழை மற்றும் சாமானிய பெண்களே வெற்றி பெறுகிறார்கள். ஒரு தேர்வு இரு தேர்வு அல்ல.. கடந்த சில ஆண்டுகளாகவே பெண்கள் தான் அரசு பணிகளில் அதிகம் வெற்றி பெறுகிறார்கள்.. எனவே அரசு பணியில் சேர விரும்பும் பெண்கள் ஆர்வமுடன் விண்ணப்பியுங்கள்.. கடமைக்கு விண்ணப்பிக்காமல், விடா முயற்சியுடன் முழு மனதோடு படித்தவர்கள் தான் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் வென்றுள்ளார்கள்.. எனவே குரூப் 4 தேர்வு மற்றும் நகராட்சி தேர்வுகளில் விண்ணப்பியுங்கள்...


முதலில் இதில் நாம் பார்க்க போவது, குரூப் 4 பணியிடங்கள்.. இந்த முறை நடைபெற உள்ள குரூப் 4 தேர்வின் மூலம் மொத்தமாக 6,244 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. 108 விஏஓ பணியிடங்கள், 2,442 இளநிலை உதவியாளர் பணியிடங்கள், சுமார் 1,700 தட்டச்சர் பணியிடங்கள் மற்றும் கணிசமான வனக்காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்காமல் உள்ளவர்கள் வரும் பிப்ரவரி 29ம் தேதிக்குள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் விண்ணப்பித்துவிடுங்கள்..


இதேபோல் மாநகராட்சி நகராட்சியில் உதவியாளர், உதவிப் பொறியாளர், இளநிலை பொறியாளர் பதவிகளில் 1,933 காலியிடங்கள் உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://tnmaws.ucanapply.com என்ற வலைதளம் மூலம் மார்ச் 13ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.


குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றால் சம்பளமாக ரூ. 19,500 - 71,900 வரை பெறலாம். பணியில் உள்ள பதவியை பொறுத்து சம்பளம் மாறுபடும்.

மாநகராட்சி நகராட்சியில் ஊதியம் எவ்வளவு: பணி ஆய்வாளர் பணிக்கு 18 200 முதல் 67100, அதேநேரம் மற்ற பணிகளுக்கு ரூ. 35,400 முதல் 1,30,400 வரையிலும், ரூ.37 700 முதல் ரூ.13,8,500 வரை சம்பளம் கிடைக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+