பெண்களுக்கு அற்புதமான வாய்ப்பு.. சென்னையிலேயே வேலை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
சென்னை: இளங்கலை பட்டப்படிப்பு படித்திருந்தால் போதும், சென்னையில் பெண்கள் உதவி மையத்தில் வேலை பார்க்கலாம். இதற்கான அறிவிப்பை சென்னை மாவட்ட ஆட்சியர் மு.அருணா வெளியிட்டுள்ளார்.
வாழ்வாதாரத்தை தேடி ஒவ்வொரு நாளும் சென்னையை நோக்கி இடம்பெயரும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் சென்னையின் மக்கள் தொகை ஒரு கொடியை தாண்டியுள்ளது. இப்படியாக சென்னைக்கு வரும் மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வேலை வாய்ப்புகளும் சமமாக உருவாக்கப்பட்டு வருகிறதா என்று கேட்டால் அது சந்தேகம்தான். இருப்பினும் அவ்வப்போது புதிய புதிய வேலைவாய்ப்புகளுக்கான அறிவிப்புகள் வந்துக்கொண்டுதான் இருக்கின்றன.

அப்படியாக பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி அமைச்சகம் சார்பில் தொடங்கப்பட்டுள்ள பெண்கள் உதவி மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற ஆட்கள் தேவைப்படுகிறார்கள் என்கிற அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியுள்ளது. சென்னையில்தான் பணியிடம் என்பதால் சென்னையை சேர்ந்தவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். இது குறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
"இந்த மையத்தில் தொகுப்பூதிய மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியுடைய, அனுபவம் உள்ள நபர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனா். அதன்படி, தகவல் தொழில்நுட்ப பணியாளர் பணியிடத்துக்கு விண்ணப்பிப்பவர்கள் இளங்கலை பட்டப் படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும். மாத ஊதியமாக ரூ.18,000 வழங்கப்படும்.
வழக்கு பணியாளர்கள் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 35 வயதுக்குள்பட்ட சமூகப் பணியில் இளங்கலை பட்டம் பெற்ற, 1 வருடம் முன் அனுபவம் உடையவராகவும், உள்ளூரைச் சேர்ந்த பெண்களாகவும், வாகனம் ஓட்டத் தெரிந்தவர்களாகவும் இருக்க வேண்டும். மாத ஊதியமாக ரூ.15,000 வழங்கப்படும்.

பன்முக உதவியாளர் காலிப் பணியிடத்துக்கு விண்ணப்பிப்பவர்கள், முன் அனுபவம் கொண்ட, உள்ளூரைச் சேர்ந்த பெண்களாகவும், நன்கு சமைக்க தெரிந்தவராகவும் இருக்க வேண்டும். மாத ஊதியம் ரூ. 6,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவா்கள் https://chennai.nic.in இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய சான்றிதழ்களுடன் செப்டம்பர் மாதம் 5ம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம்" என்று கூறப்பட்டுள்ளது.
-
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications