திருச்செந்தூர் முருகன் கோவிலில் வேலை! லட்சத்தில் சம்பளம்.. என்ஜினியரிங் முடிச்சவங்க விண்ணப்பிக்கலாம்
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோவிலில் என்ஜினியரிங் முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.
திருச்செந்தூரில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி முருகன் கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்தக் கோவிலில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்பு வெளியிட்டு நிரப்பப்படுகின்றன.

காலிப்பணியிடங்கள்: அந்த வகையில், தற்போது திருச்செந்தூர் கோவிலில் காலியாக உள்ள ஜூனியர் என்ஜினியர் (01 பணியிடம்), அஸ்சிஸ்டண்ட் என்ஜினியர் (01), மடப்பள்ளி (துணை கோவில் -03) திருவலகு (துணை கோவில் -11) என மொத்தம் 06 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு தேவையான கல்வி தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
கல்வி தகுதி:
1. ஜூனியர் என்ஜினியர் (எலக்ட்ரிக்கல்): எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ பட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும்.
2. அஸ்சிஸ்டண்ட் என்ஜினியர் (சிவில்): சிவில் என்ஜினியரிங் பிரிவில் பட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும். பொறியாளர்களுக்கான கல்வி நிறுவனத்தில் (இந்தியா) பிரிவு ஏ மற்றும் பி- யில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. மடப்பள்ளி பணிக்கு தமிழில் எழுதபடிக்க தெரிந்து இருக்க வேண்டும். பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப நெய்வேத்யம் மற்றும் பிரசாதம் தயாரிக்க தெரிந்து இருக்க வேண்டும்.
4. திருவலகு பணிக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும்.
வயது வரம்பு: 18 முதல் 45 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். சம்பளத்தை பொறுத்தவரை ஜூனியர் என்ஜினியர் பணிக்கு மாதம் ரூ.35,900-1,13,500 வரையும் அஸ்சிஸ்டண்ட் என் ஜினியர் (சிவில்) பணிக்கு மாதம் ரூ.36,700-116,200 வரையும் வழங்கப்படும். மடப்பள்ளி பணிக்கு மாதம் ரூ 6 ஆயிரம் வழங்கப்படும்.
தேர்வு முறை: தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வு மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் 14.02.2024 ஆகும்.
நிபந்தனைகள்:
1. இந்து மதத்தை சார்ந்தவராகவும், தமிழ்நாட்டை சார்ந்தவராகவும் இருக்க வேண்டும்.
2. தொற்று நோய் உடல் அல்லது மனநிலை குன்றிய குறைபாடுகள் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.
3. நீதிமன்றத்தில் தண்டனை அடைந்தவர்கள். பட்ட கடனை தீர்மானிக்கப்பட்டவர்கள் முடியாதவர்கள் என நீதிமன்றத்தில் தீர்மானிக்கப்பட்டவர்கள். அரசுப்பணிகள், பொது ஸ்தாபனங்கள் மற்றும் வேறு இடங்களில் பணிபுரிந்து தண்டனை காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் ஆகியோர்கள் மேற்படி பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள்.
4. நன்னடத்தை உடையவராக இருக்க வேண்டும். இதற்கு அரசிதழ் பதிவு பெற்ற அரசு உயரதிகாரிகளியிருந்து பெறப்பட்ட நன்னடத்தைச் சான்று மற்றும் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
5. இந்த வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடும் தேதிக்கு முன்னதாக வரப்பெற்ற விண்ணப்பங்களும், 14.02.2024-ம் தேதி மாலை 05.45 மணிக்கு பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும்.
6. விண்ணப்பம் அனுப்பப்படும் மேலுறையின் மீது கண்டிப்பாக பதவியின் பெயர் குறிப்பிட்டு அனுப்பப்பட வேண்டும்.
7. வரப்பெற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் சரிப்பார்க்கப்பட்டு தகுதியுள்ள நபர்களுக்கு மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அறிவிப்பு அனுப்பப்படும்.
8. நேரடி நியமனம் இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகளுக்குட்பட்டவை.
9. விண்ணப்பதாரர் நல்ல தேக ஆரோக்கியம் உள்ளவராக இருக்க வேண்டும்.
10. விண்ணப்பங்களுடன் அனுப்பப்படும் அனைத்துச் சான்றிதழ்களும் அரசு பதிவு பெற்று அலுவலர் சான்றொப்பம் பெறப்பட்ட புகைப்பட நகல்களாக மட்டுமே இருக்க வேண்டும். அசல் சான்றிதழ்கள் அனுப்ப கூடாது.
11. ராஜீகத்தாலும் தெய்வீகத்தாலும் ஏற்படும் மாற்றங்களுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல.
12. விண்ணப்பங்களுக்கு கட்டணம் கிடையாது.
13. PVR (Police Verification Report) சமர்ப்பிக்க வேண்டும்.
14. விண்ணப்பதாரர் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி இணை ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருச்செந்தூர் 628215, தூத்துக்குடி மாவட்டம் தொலைபேசி எண்: 04639-242221.
தேர்வு அறிவிப்பை தெரிந்து கொள்ள https://tiruchendurmurugan.hrce.tn.gov.in/ என்ற இணையதள லிங்கை கிளிக் செய்யவும்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications