டிகிரி போதும்! வனத்துறையில் டேட்டா என்ட்ரி, டெக்னிக்கல் அசிஸ்டென்ட் வேலை! மதுரையிலேயே பணி
மதுரை: தமிழ்நாடு வனத்துறையில் மதுரை வனக்கோட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிகிரி முடித்தவர்கள் வரும் 14ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம்.
தமிழ்நாடு வனத்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் முறையான அறிவிப்புகளின்படி அவ்வப்போது நிரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் மதுரை வனக்கோட்டத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:

மதுரை வனக்கோட்டத்தில் தொழில்நுட்ப உதவியாளர் (டெக்னிக்கல் அசிஸ்டென்ட்), தரவு நுழைவு இயக்குபவர் (டேட்டா என்ட்ரி) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் பிஎஸ்சி வனவியல், வேளாண்மை அல்லது எம்எஸ்சி வனவிலங்கு உயிரியல், லைப் சயின்ஸ், தாவரவியல், விலங்கியல், நேச்சூரல் சயின்ஸ் அல்லது அதற்கு இணையான 2 ஆண்டு அனுபவம் கொண்ட களநிலை ஆராய்ச்சி செய்த அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
இல்லாவிட்டால் எம்சிஏ அல்லது அதற்கு சமமான எம்ஐஎஸ்/ஜிஐஎஸ் 2 ஆண்டு அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இதுதவிர தமிழ்நாடு வனத்துறையின் பணியாளர்கள் தர ஊதியம் ரூ.4,800 மற்றும் அதற்கு மேல்உரிய அனுபவத்துடன் ஒய்வு பெற்றவர்களும் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் பட்டம்/டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இல்லாவிட்டால் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து கம்ப்யூட்டர் பயன்பாடுகளில் சான்றிதழுடன் பட்டம்/டிப்ளமோ முடித்திருப்பதோடு, கம்ப்யூட்டரில் ஆங்கிலம் மற்றும் தமிழில் ‛டைப்' செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். ‛‛உதவி வனப்பாதுகாவலர் அலுவலகம், வேளாண் வனவியல் ஆராய்ச்சி கோட்டம், வனவளாகம், ரேஸ்கோர்ஸ் ரோடு, மதுரை - 2, தொலைபேசி எண்: 0452 - 2531148'' என்ற முகவரியில் விண்ணப்பம் பெற்று ஆகஸ்ட் 14ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். சந்தேகம் இருப்பின் வேலை நாட்களில் மேற்கூறிய தொடர்பு எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் நேர்க்காணல் முறையில் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இது ஒரு தற்காலிக பணியாகும். மாத சம்பளம் குறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனாலும் தகுதியின் அடிப்படையில் நல்ல சம்பளம் வழங்கப்படும்.
-
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications