தமிழக அரசு வருவாய் துறையில் அலுவலக உதவியாளர் பணியிடங்கள்.. ரெடியாக இருங்க! வரப்போகுது சூப்பர் சான்ஸ்
சென்னை: தமிழக அரசு வருவாய் துறையில் அலுவலக உதவியாளர் (Revenue Department Office Assistant Jobs) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாக உள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்ட வாரியாக காலியிடங்கள் அறிவிக்கப்படும். சொந்த மாவட்டத்திலேயே அரசு வேலை பார்க்க வேண்டும் என கனவுடன் இருப்பவர்களுக்கு இது ஒரு சூப்பர் வாய்ப்பாக இருக்கலாம்.
தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகம் முழுவதும் வருவாய் கிராமங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு, இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உள்ளூரில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை
இந்த பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. எழுத்துத் திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் உள்ளூரில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை அளித்து இந்த பணியிடங்களை நிரப்ப உத்தரவிடப்பட்டிருந்தது. இதற்கான விண்ணப்பங்கள் பரிசீலனை, ஹால் டிக்கெட் வெளியீடு உள்ளிட்டவை போன்ற பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
வருவாய் துறை அலுவலக உதவியாளர் பணி
இந்த நிலையில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வருவாய் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் நேர்முக உதவியாளர் (பொது) மூலம் நியமிக்கலாம் என்று தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட வருவாய் அலுவலர், வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்களில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நிரப்பப்படாமல் இருக்கும் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
1,000 பணியிடங்கள் நிரப்பப்படும்
ஏற்கனவே இதற்கான ஒப்புதலை அரசு அளித்திருந்த போதிலும், அவை நிரப்பப்படாமல் இருந்தன. எனவேதான் தற்போது உடனடியாக வருவாய்துறை அலுவலகங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை தாமதமின்றி நிரப்புவதுடன், அது தொடர்பான அறிக்கையை உடனடியாக அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் அமுதா, ஐ.ஏ.எஸ். உத்தரவிட்டுள்ளார்.
எனவே, இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்ட வாரியாக காலியிடங்கள் அறிவிக்கப்படும். சொந்த மாவட்டத்திலேயே அரசு வேலை பார்க்க வேண்டும் என கனவுடன் இருப்பவர்களுக்கு இது ஒரு சூப்பர் வாய்ப்பாக இருக்கலாம்.
அமுதா ஐஏஎஸ் உத்தரவு
இந்த பணியிடங்களுக்கு கடந்த முறை 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. எனவே அதனை பின்பற்றியே கல்வித் தகுதி உள்ளிட்டவை இருக்கும் என தெரிகிறது. காலிப் பணியிடங்கள், விண்ணப்ப நடைமுறைகள் தொடர்பாக மாவட்ட வாரியாக விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பெ. அமுதா, ஐ.ஏ.எஸ்., கூடுதல் தலைமைச் செயலாளர்/வருவாய் நிர்வாக ஆணையருக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருந்ததாவது:-
அலுவலக உதவியாளர் பணியிடங்கள்
"வருவாய்த் துறையில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 3 வருடங்களுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விதிகளுக்கு உட்பட்டு நிரப்பலாம் என்று ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தும், இதுவரை அக்காலிப் பணியிடங்களை நிரப்ப எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, மேற்காணும் காலிப் பணியிடங்களை மேலும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக நிரப்ப நடவடிக்கை மேற்கொண்டு, அதன் அறிக்கையை அரசுக்கு அனுப்புமாறு தங்களை கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications