58,600 ரூபாய் வரை சம்பளம்.. இந்து சமய அறநிலையத்துறையில் வேலை! இன்னும் 10 நாள் தான் இருக்கு!
சென்னை: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில் மருத்துவ மையத்தில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்படும் இந்த மருத்துவ மையத்தில் மருத்துவர், செவிலியர், நர்சிங் உதவியாளர் என மொத்தம் 6 காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தக் காலிப்பணியிடங்களுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இந்து மதத்தைச் சார்ந்த தமிழ்நாட்டு விண்ணப்பதாரர்களிடம் இருந்து நவம்பர் 24-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலிப்பணியிட விவரங்கள்
1. மருத்துவர் (Medical Officer)
காலியிடங்கள்: 2
தகுதி: எம்பிபிஎஸ் பட்டம்
சம்பளம்: ரூ.36,700 - 1,16,200
2. உதவி செவிலியர் (Staff Nurse)
காலியிடங்கள்: 2
தகுதி: ANM / Diploma in Nursing
சம்பளம்: ரூ.18,500 - 58,600
3. நர்சிங் உதவியாளர் (Nursing Assistant)
காலியிடங்கள்: 2
தகுதி: பிளஸ்-2 தேர்ச்சி
சம்பளம்: ரூ.11,600 - 36,800
வயது வரம்பு:
எல்லா பணியிடங்களுக்கும் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
எந்தத் விண்ணப்பக் கட்டணமும் இல்லை.
தேர்வு நடைமுறை:
வரப்பெறும் விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு, தகுதி உள்ளவர்களுக்கு மட்டும் நேர்முகத் தேர்வு அழைப்பு அனுப்பப்படும். நேர்முகத் தேர்வின் அடிப்படையில் இறுதி தேர்வு நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை:
அதிகாரப்பூர்வ இணையதளமான melmalayanurangalamman.hrce.tn.gov.in மூலம் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். படிவத்தை தெளிவாக பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களும் இணைக்கப்பட வேண்டும். விண்ணப்பம் அனுப்பப்படும் உறையின் மீது விண்ணப்பிக்கும் பதவியின் பெயரை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
உதவி ஆணையர் / செயல் அலுவலர்
அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில்
மேல்மலையனூர் (ம) வட்டம்
விழுப்புரம் மாவட்டம் - 604 204
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 24.11.2025
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications