நோ எக்ஸாம்-இன்டர்வியூ.. மாத ஊதியம் ரூ.62,000.. டிஎன்எம்ஆர்பியில் 2,500 காலியிடம்! தமிழகத்திலேயே பணி
சென்னை: தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தில் ஆக்சிலரி நர்ஸ் மற்றும் கிராம சுகாதார நர்ஸ் பணிக்கு 2,500 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.19,500ம், அதிகபட்சமாக ரூ.62,000 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு டிஎன்எம்ஆர்பி எனும் தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம்(TNMRB or Tamil Nadu Medical Recruitment Board) சார்பில் ஆட்சேர்ப்பு நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் நேற்று முன்தினம் புதிய காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:
காலியிடம்-சம்பளம்: தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் சுகாதாரத்துறையில் காலியாக ஆக்சிலரி நர்ஸ் மற்றும் கிராம சுகாதார நர்ஸ் பிரிவில் மொத்தம் 2,500 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.19,500 வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ.62,000 வரை வழங்கப்படும்.
வயது வரம்பு: இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 18 வயது முதல் 42 வயதுக்குள் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் ஓசி பிரிவை சேர்ந்தவர்களாக இருந்தால் 52 வயதுக்குள்ளும், கணவரை இழந்த ஓசி பிரிவை சேர்ந்த பெண்கள் என்றால் 59 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். மாறாக எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ, பிசி, பிசிஎம், எம்பிசி, டிஎன்சியை சேர்ந்தவர்கள் என்றால் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு என்பது 13.09.2023 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.
கல்வி தகுதி: பணிக்கு விண்ணப்பம் செய்வோர் பிளஸ் 2 முடித்து 2 ஆண்டுக்கான மல்டி பர்பஸ் ஹெல்த் வொர்க்கர் டிரெய்னிங் கோர்ஸ்/ ஆக்சிலரி நர்ஸ் மிட்வைப்ரி டிரெய்னிங் கோர்ஸ் முடித்து தமிழ்நாடு நர்சஸ் மற்றும் மிட்வைப்ஸ் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.mrb.tn.gov.in இணையதளம் மூலம் அக்டோபர் மாதம் 31ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.600 நிர்ணயம் செய்ப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்சி, எஸ்டி, டிஏபி(பிஎச்), கைம்பெண்களுக்கு கட்டணம் ரூ.300 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு விண்ணப்பம் செய்வோரின் 10, பிளஸ் 2, சான்று படிப்பு முடித்ததன் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்க்காணல் கிடையாது. இதன்மூலம் எழுத்து தேர்வு இல்லை என்பதும் உறுதியாகி உள்ளது. இருப்பினும் இது ஒரு தற்காலிக பணியாகும்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications