தூத்துக்குடியில் கிளார்க் வேலை.. 300 பணியிடங்கள்! 8 ஆம் வகுப்பு கல்வி தகுதி தான்.. தட்டி தூக்குங்க
சென்னை: தூத்துக்குடியில் தமிழ்நாடு அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் காலியாக உள்ள 300 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். இந்த பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது, யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கு பார்க்கலாம்.
தமிழ்நாடு அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் காலியாக உள்ள 300 பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மண்டலத்தில் மட்டும் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இது தொடர்பான அறிவிப்பு நாளிதழில் வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள், கல்வி தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

காலிப்பணியிடங்கள்:
தேர்வு செய்யப்படுவர்களின் எண்ணிக்கை:
சீசனல் பில் கிளார்க்: 100
உதவுபவர்: 100
காவலர்: 100
தேவைப்படும் பணியாளர் எண்ணிக்கை:
பருவகால பட்டியல் எழுத்தர்: 20,
பருவகால உதவுபவர்: 20,
பருவகால எழுத்தர்: 20
கல்வி தகுதி:
பருவகால பட்டியல் எழுத்தர் பணிக்கு பிஎஸ்சி (அறிவியல், விவசாயம் மற்றும் இளங்கலை பொறியியல்) முடித்து இருக்க வேண்டும்.
பருவகால உதவுபவர் பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பருவகால காவலர் பணிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 01.7.2025 தேதிப்படி 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் பிசி, எம்பிசி உள்ளிட்ட பிரிவினருக்கு 34 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சம்பளம் எவ்வளவு?
பருவகால எழுத்தர்: ரூ.5,285 + டி.ஏ, போக்குவரத்துப்படி ஒருநாளைக்கு ரூ.120 வழங்கப்படும்.
பருவகால உதவுபவர் மற்றும் காவலர் பணிக்கு: ரூ.5,218 + அகவிலைப்படி, போக்குவரத்துப்படி ரூ.100 வழங்கப்படும்.
பிற விவரங்கள்:
விண்ணப்பதாரர்கள் தூத்துக்குடி மாவட்டத்தை இருப்பிடமாக கொண்டவராக இருக்க வேண்டும். மேற்காணும் தகுதியுடைய நபர்களிடம் இருந்து மட்டும் விண்ணப்பங்கள் உரிய சான்றிதழ் நகலுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
மண்டல மேலாளர், மண்டல அலுவலகம்,
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம்,
C 42,43,44 சிப்காட் காம்ப்ளக்ஸ்,
மீளவிட்டான், மடத்த்தூர் (அஞ்சல்),
தூத்துக்குடி -8,
மேற்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பங்கள் 31.07.2025 அன்று மாலை 5 மணி வரை மட்டுமே பெற்றுக்கொள்ளப்படும். எனவே அதற்கு முன்பாக வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும்.
-
எஸ்பிஐ வங்கியில் வேலை.. டிகிரி முடித்தவர்களுக்கு செம சான்ஸ்.. 7,150 பணியிடங்கள்.. தேதி முடிய போகுது -
சென்னை உட்பட.. 15 மாவட்டங்களுக்கு மழை! உஷார் மக்களே.. வானிலை மையம் வார்னிங்! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்!












Click it and Unblock the Notifications