தமிழ் எழுத படிக்க தெரியுமா? 48 ஆயிரம் சம்பளத்தில் வேலை! அதுவும் சென்னையிலேயே! செம சான்ஸ் விட்றாதீங்க
சென்னை: சென்னை எழும்பூரில் அமைந்து இருக்கும் அருள்மிகு சீனிவாச பெருமாள் திருக்கோயிலில் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. தமிழ் எழுத படிக்க தெரிந்தால் போதும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.48,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை கோயில் நிர்வாக பணிகளை மேற்கொண்டு வருகிறது. அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் கோவில்களில் ஏற்படும் நிர்வாக ரீதியான பணியிடங்கள் உள்ளிட்டவற்றை நிரப்பும் பணியையும் அறநிலையத்துறை செய்து வருகிறது.

அந்த வகையில், சென்னை எழும்பூரில் அமைந்து இருக்கும் அருள்மிகு சீனிவாச பெருமாள் திருக்கோயிலில் காலியாக உள்ள 10 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளளது. இது குறித்த முழுமையான விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
மேளக்குழு - 01, பரிச்சாரகர், அலுவலக உதவியாளர், அத்யாபாகம், பகல் காவலர், இரவு காவலர், திருவலகு, இரவு காவலர் (02 பணியிடங்கள்), திருவலகு (02) என மொத்தம் 10 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வித் தகுதி:
தமிழில் எழுதவும் படிக்கவும், தெரிந்து இருக்க வேண்டும். இசைத்துறையில் நன்கு பயிற்சி பெற்ற சான்றிதழ் அல்லது மதம் சார்ந்த இசை பள்ளி பயிற்சி சான்றிதழ் அல்லது தமிழ்நாடு அரசு இசைப்பள்ளி பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்
பரிச்சாரகர்:
* தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும்.
* திருக்க்கோயில் நைவேத்தியம் மற்றும் பிரசாதங்கள் நன்கு தயார் செய்ய தெரிந்து இருக்க வேண்டும் (ம) பிரசாதம் தயார் செய்தல் (ம) விநியோகம் செய்யவும் தெரிந்து இருக்க வேண்டும்.
* திருக்கோயில் பழக்க வழக்கங்கள் நன்கு தெரிந்து இருக்க வேண்டும்
* வைகாசனம் ஆகம விதிப்படி பூஜை மற்றும் சடங்குகளை நடத்துவதற்கான நடைமுறைகளை அறிந்து இருக்க வேண்டும்.
* அலுவலக உதவியாளர்: குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
* அத்யாபாகம்: தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். ஏதேனும், ஆகம பள்ளி (அ) அரசு சார்ந்த வேதபாட சாலையில் 3 ஆண்டுகள் படித்து தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
* பகல் காவலர், திருவலகு பணியிடங்களுக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும்.
விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப்பங்களை 10.05.2025 முதல் 09.06.2025 வரை திருக்கோயில் அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை திருக்கோயில் அலுவலகத்தில் 09.06.2025 அன்று மாலை 5.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதில் திருத்தங்கள் மாற்றங்கள் இருப்பின் துறை இணையதள முகவரியில் மட்டுமே வெளியிடப்படும்.
பிற நிபந்தனைகள்:
* விண்ணப்பதாரர் 10.05.2025-ம் தேதி அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராகவும். 45 வயது மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
* இந்து மதத்தைச் சார்ந்தவராகவும் இறை நம்பிக்கை உடையவராகவும் இருத்தல் வேண்டும்.
இவ்விளம்பரம் செய்யப்பட்ட தேதிக்கு பிறகு உரிய காலத்தில் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
* விண்ணப்பத்துடன் கல்வித் தகுதிக்குரிய சான்றிதழ்கள் மற்றும் ஆதார் அட்டை நகல் வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல் போன்ற பிற ஆவணங்களுக்கு அரசிதழ் பதிவுபெற்ற அலுவலரிடம் சான்றொப்பம் Attested Xerox Copy Only) அனுப்பப்பட வேண்டும்.
* விண்ணப்பதாரர் வயதிற்கான சான்று ஆவணம் அல்லது கல்வி நிலையத்தால் வழங்கப்பட்ட மாற்று சான்றிதழ் (Transfer Certificate) நகல் இணைக்கப்பட வேண்டும். விண்ணப்ப படிவத்தில் விவரங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்படாமலும் கேட்கப்பட்ட சான்று நகல்கள் இணைக்கப்படாமலும் பெறப்படும் விண்ணப்பங்கள் ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்கப்படும்.
* தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர் இத்திருக்கோயிலின் உபகோயில்களுக்கும், பணியிட மாறுதல் செய்யப்படுவார். பகல் காவலர் மற்றும் இரவு காவலர் பணியிடம் சுழற்சி முறையில் பணியாற்ற வேண்டும்.
* பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர் பணியில் சேர வரும் நேரத்தில் விண்ணப்பதாரர் வசிக்கும் எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் விண்ணப்பதாரர் மீது குற்றவியல் நடவடிக்கை ஏதும் இல்லை என்ற சான்றிதழ் மற்றும் உடல் தகுதி சான்றிதழ்களின் அசல் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
தேர்வு அறிவிப்பினை படித்து தெரிந்து கொள்ள: https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/230/document_1.pdf












Click it and Unblock the Notifications