ரெடியா? மாத ஊதியம் ரூ.37,700 டூ ரூ.1.90 லட்சம்! தமிழகத்திலேயே அரசு வேலை! டிஎன்பிஎஸ்சி ‛குட்நியூஸ்’
சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் ஒருங்கிணைந்த புவியியல் துணை சேவை தேர்வில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.37,700 முதல் ரூ.1.19 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாடு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வேலையை டிஎன்பிஎஸ்சி எனும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மேற்கொண்டு வருகிறது. இந்த தேர்வாணையம் சார்பில் தற்போது புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன்படி தற்போது ஒருங்கிணைந்த புவியியல் துணை சேவையின் கீழ் உதவி ஜியாலஜிஸ்ட் பொறுப்பில் (Assisatant Geologist for Combined Geology Subordinate service Examination) 40 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் நீர்வளத்துறையில் நிலத்தடி நீர் விங்கிற்கு 11 பேரும், புவியியல் மற்றும் கனிம வளத்துறையில் 29 பேரும் பணியமர்த்தப்பட உள்ளனர்.

விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சமாக 18 வயதும் அதிகபட்சமாக 32 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். ஆதிதிரவிடர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வயது வரம் இல்லை. வயது வரம்பு என்பது 1.7.2023 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.
பணிக்கு விண்ணப்பம் செய்வோர் எம்எஸ்சி பிரிவில் Geology, Applied Geology, Hydrogeology உள்ளிட்ட படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக குறைந்தபட்சம் ரூ.37,700 முதல் அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 500 வரை வழங்கப்படும்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.tnpscexams.in அல்லது www.tnpsc.gov.in இணையதளங்கள் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்ய மே மாதம் 26ம் தேதி கடைசிநாளாகும். விண்ணப்பம் செய்ய பதிவு கட்டணமாக ரூ.150, தேர்வு கட்டணமாக ரூ.150 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர், பழங்குடியினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.
பணிக்கு விண்ணப்பம் செய்ய ஜூன் மாதம் 23ம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்ய ஜூன் 28 ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை நேரம் வழங்கப்படுகிறது. இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு, நேர்க்காணல் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுவார்கள். இந்த எழுத்து தேர்வு 2 கட்டமாக ஆகஸ்ட் மாதம் 18 ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 9.30 மணி முத்ல மதியம் 312.30 மணி வரை முதல் தாள் தேர்வும், மதியம் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 2ம் தாள் தேர்வும் நடைபெற உள்ளது.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
ஓசூர், சேலம், சென்னை.. 24 மணிநேரத்தில் 3000 கோடியில் 3 மெகா முதலீடுகள்.. தேர்தல் நேரத்திலும் மாஸ்! -
RTE admissions: தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! ஆர்டிஇ சேர்க்கை எப்போது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல்












Click it and Unblock the Notifications