அசர வைத்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2.. பிஇ படிச்சவங்க மனசை குளிர வச்சிட்டாங்க! இதெல்லாம் செம சான்ஸ்!
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் படித்தவர்களுக்கு முக்கியமான நல்ல செய்தி ஒன்றை டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. பலருக்கும் இருந்த மிகப்பெரிய குழப்பம் ஒன்றை டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தீர்த்து உள்ளது.
அதன்படி : டிஎன்பிஎஸ்சி குரூப் 1 மற்றும் 2 தேர்வுகள் விரைவில் நடக்க உள்ள நிலையில் அது தொடர்பான முக்கியமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஜூலை 13 அன்று குரூப் 1 பதிவுகளுக்கான தேர்வு நடைபெற இருக்கிறது. அதேபோல் குரூப் 2 முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் மாதம் 14ஆம் தேதிநடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

குரூப் 2 தேர்வில் குறிப்பிட்ட சில பதவிகளுக்கு தொழில்முறை தகுதிகள் உள்ள விண்ணப்பதாரர்கள் தகுதியுடையவர்களா? என்ற கேள்வி பலரிடம் உள்ளது. அதன்படி பிஇ படித்தவர்களும் கூட இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
தொழில்முறைத் தகுதிகள் (Β.Ε., Μ.Β.Β.S., B.L., B.V.Sc., B.Sc. (Agri)) உள்ள விண்ணப்பதாரர்களும் பின்வரும் பதவிகளுக்குத் தகுதியுடையவர்கள்:
1. தகுதிகாண் அதிகாரி (பதவி குறியீடு:1011)
2. துணை வணிக வரி அதிகாரி (பதவி குறியீடு:1013)
3. இளைய வேலைவாய்ப்பு அதிகாரி (பதவி குறியீடு:1017)
4. தணிக்கை ஆய்வாளர் (பதவி குறியீடு:1029)
5. உதவி ஆய்வாளர் (பதவி குறியீடு:1069)
6. கைத்தறி ஆய்வாளர் (பதவி குறியீடு:1868
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் கடந்த 08.03.2024 முதல் 30.04.2024 வரையிலான காலத்தில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி 1இல் அடங்கிய பதவிகளுக்கு 94 நபர்களும், தொகுதி II இல் அடங்கிய பதவிகளுக்கு 47 நபர்களும், ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கு 851 நபர்களும். தொகுதி VA தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கு 165 நபர்களும் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப மொத்தம் 1163 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
டிஎன்பிஎஸ்சி தேர்வு; இதையடுத்து கடந்த வாரம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜூன் 9ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை நடத்தியது. தமிழகத்தில் பல்வேறு துறைகளில் உள்ள 6624 க்ரூப் 4 காலியிடங்களை நிரப்பவே இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் 7,247 தேர்வு மையங்களில் நடந்த 10 ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட குரூப் 4 தேர்வை 15.8 லட்சம் பேர் எழுதியுள்ளனர் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் இதன் மூலமே நிரப்பப்படும். குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்குத்தான் நேற்று டிஎன்பிஎஸ்சி தேர்வு நடந்தது.
டிஎன்பிஎஸ்சி எனும் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆண்டுதோறும் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் முறையான அறிவிப்புகளுடன் நிரப்பப்பட்டு வருகின்றன. டிஎன்பிஎஸ்சியில் குரூப் 1 முதல் குரூப் 8 வரை பல்வேறு பணிகளுக்கு தேர்வு நடத்தப்படுகிறது.
6,244 காலி பணியிடங்களுக்கான இந்த தேர்வை நேற்று 20 லட்சம் பேர் வரை எழுதினர். இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வில் கிராம நிர்வாக அலுவலர்- 108, இளநிலை உதவியாளர்-2,604, தட்டச்சர்- 1,705, சுருக்கெழுத்து தட்டச்சர்- 445, தனி உதவியாளர், கிளார்க்- 3 உள்ளிட்ட பல பணிகளுக்கான தேர்வு நடந்தது.
குரூப் 2 தேர்வு: குரூப் 2 தேர்வில் எழுத உள்ளவர்களுக்கு முக்கிய செய்தி ஒன்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இதிலும் இன்வேலிட் மதிப்பெண் முறை மீண்டும் கடைப்பிடிக்கப்பட உள்ளது. மேலும் பொறியியல் படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். அதேபோல் மருத்துவம் படித்தவர்களும் இதில் விண்ணப்பிக்கலாம். அது தொடர்பான காலி இடங்கள் அதிகம் உள்ளன.
அதனால் அவர்களுக்கும் விண்ணப்பிக்க இந்த முறை அனுமதி வழங்கப்பட உள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications