டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு... இது ஸ்வீட் செய்தி அல்ல.. அதென்ன 326.. மலைக்க வைத்த மக்கள்
சென்னை: 6 ஆயிரத்து 244 பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பத்துள்ளார்கள். சரியாக புள்ளிவிவரத்துடன் சொல்வது என்றால், ஒரு இடத்துக்கு 326 பேர் போட்டியிடுகிறார்கள்.
தமிழ்நாட்டில் அதிகப்படியான மக்கள் அரசு வேலைகளில் சேர உதவும் தேர்வு என்றால், சந்தேகமே வேண்டாம் அது குரூப் 4 தேர்வு தான். கடந்த முறை நடந்த தேர்வின் மூலம் சுமார் 10000 பேர் அரசு வேலையில் சேர்ந்தனர். இந்த முறை ஆறு ஆயிரத்திற்கும் அதிகமானோர் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

குரூப் 4 என்பது அரசு ஊழியர்கள் ஆக விரும்புவோருக்கான முக்கியமான தேர்வு ஆகும். இந்த குரூப் 4 தேர்வின் கீழ் கிராம நிர்வாக அலுவலர் 108, இளநிலை உதவியாளர் 2,604, தட்டச்சர் 1,705, சுருக்கெழுத்துதட்டச்சர் 445, தனி உதவியாளர், கிளர்க் 3, தனி செயலாளர் 4, இளநிலை நிர்வாகி 41, வரவேற்பாளர் 1, பால் பதிவாளர் 15, ஆய்வக உதவியாளர் 25, பில் கலெக்டர் 66, தொழிற்சாலை மூத்த உதவியாளர் 49, வன பாதுகாவலர், காவலர் 1,177, இளநிலை ஆய்வாளர் 1 ஆகிய 6 ஆயிரத்து 244 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை கடந்த ஜனவரி மாதம் 30ந் தேதி வெளியிட்டது.
டிஎன்பிஎஸ்சி என்று சுருக்கமாக அழைக்கப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பின் படி, இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கடந்த பிப்ரவரி 8ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் வழக்கமாக டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகளில் அதிகப்படியானவர்கள் விண்ணப்பிக்கக்கூடிய தேர்வாக குரூப் 4 தேர்வு தமிழ்நாட்டில் இருந்து வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான 6 ஆயிரத்து 244 காலிப் பணியிடங்களுக்கும் தேர்வர்கள் லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்து இருந்தார்கள்.
எப்போதுமே குரூப் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானால், விண்ணப்பப் பதிவுக்கு காலஅவகாசம் நீட்டிக்கப்படும். ஆனால் அதுதொடர்பான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஏற்கனவே அறிவித்தபடி, கடந்த பிப்ரவரி மாதம் 28ந் தேதியுடன் விண்ணப்பப் பதிவு நிறைவு பெற்றதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. இதனிடையே டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி 6 ஆயிரத்து 244 பணியிடங்களுக்கு 20 லட்சத்து 37 ஆயிரத்து 94 பேர் விண்ணப்பித்து இருப்பதாக டிஎன்பிஎஸ்சி கூறியுள்ளது. அதாவது ஒரு பணியிடத்துக்கு சுமார் 326 பேர் போட்டியிடுகிறார்கள். விண்ணப்பித்தவர்களுக்கு எழுத்து தேர்வு வருகிற ஜூன் மாதம் 9ந் தேதி நடைபெற உள்ளது. கடந்த 2022ம் ஆண்டு அறிவிப்பு வெளியான 7 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட குரூப் 4 பணியிடங்களுக்கு 22 லட்சத்து 2 ஆயிரத்து 942 பேர் விண்ணப்பித்திருந்தார்கள். இந்த முறை அதைவிட அதிகமானோர் விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications