Group 4: குரூப் 4 தேர்வர்களுக்கு முக்கிய தகவலை சொன்ன டிஎன்பிஎஸ்சி! இந்த தவறு பண்ணியிருந்தால் உடனே செக் பண்ணுங்க
சென்னை: நடப்பு ஆண்டில் கடந்த ஜூலை மாதம் குரூப் 4 தேர்வு (Group 4 Exam) நடைபெற்றது. இதற்கான அடுத்த கட்ட தேர்வு நடைமுறைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, கடந்த ஆண்டு குரூப் 4 தேர்வில் வெற்றிக்கு தேவையான கட் ஆஃப் பெற்ற தேர்வர்களுக்கு சான்றிதழ் பதிவேற்றம் தொடர்பாக ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அது என்ன என்பதை இங்கு பார்க்கலாம்.
தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழக அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தால் நிரப்பப்படுகிறது. குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சியால் நிரப்பப்படுகிறது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு
நன்றாக படித்து போட்டித் தேர்வில் வெற்றிபெற்றால் போதும்.. உடனடியாக வேலை கிடைக்கும். யாரிடமும் சிபாரிசுக்கு போய் நிற்க வேண்டியதில்லை. படித்து வெற்றி பெற்றால் வேலை நிச்சயம் என்பதால், டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகள் தமிழகத்தில் அரசு பணிகளுக்காக காத்திருக்கும் பல லட்சம் தேர்வர்களுக்கு கலங்கரை விளக்கமாக உள்ளது.. குரூப் தேர்வுகளில் குரூப் 4 தேர்வு என்பது பத்தாம் வகுப்பு கல்வி தகுதி கொண்டதாகும்.
விஏஓ, இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் இதில் நிரப்பப்படுகின்றன. பிற தேர்வுகளை விட குரூப் 4 தேர்வுக்கு தேர்வர்கள் மத்தியில் கடுமையான போட்டி இருக்கும். சில ஆயிரம் பணியிடங்களுக்கு கூட பல லட்சக்கணக்கான தேர்வர்கள் போட்டி போடுவார்கள். தேர்வு திருவிழா என சொல்லும் அளவுக்கு தமிழகம் முழுக்க குரூப் 4 தேர்வு நடைபெறும் என்று பேருந்து நிலையங்கள், பள்ளிகள் என எங்கு பார்த்தாலும் குரூப் 4 தேர்வர்களையே கண்ணில் காண முடியும்.
டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
அந்த அளவுக்கு குரூப் 4 தேர்வுகளுக்கு போட்டி நிலவுகிறது. இந்த ஆண்டு கடந்த ஜூலை மாதம் குரூப் 4 தேர்வு நடைபெற்றது. இதற்கான அடுத்த கட்ட தேர்வு நடைமுறைகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே, கடந்த ஆண்டு குரூப் 4 தேர்வில் வெற்றிக்கு தேவையான கட் ஆஃப் பெற்ற தேர்வர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு ஒன்றை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இது குறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
குறைபாடாக சான்றிதழ் பதிவேற்றம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்: 01/2024 நாள்: 30.01.2024 இன் வாயிலாக ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - IV (தொகுதி - IV பணிகள்) உள்ள வனக் காவலர் மற்றும் வனக் காப்பாளர் பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கு தேர்வர்களால் சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்பட்டதில், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின்னர் சில தேர்வர்கள் உரிய சான்றிதழ்களை குறைபாடாக / சரியாக பதிவேற்றம் செய்யப்படாமல் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
விண்ணப்பம் நிராகரிக்கப்படும்
எனவே, இத்தகைய தேர்வர்களுக்கு இறுதி வாய்ப்பு வழங்கும் விதமாக 30.08.2025 முதல் 05.09.2025 இரவு 11.59 மணி வரை விடுபட்ட மற்றும் சரியான சான்றிதழ்களை மறுபதிவேற்றம் செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது. இத்தகவல் அத்தேர்வர்களுக்கு மட்டும் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, அத்தேர்வர்கள் அனைவரும் மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ள சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில் ஒருமுறைப் பதிவு தளம் (OTR) வாயிலாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். அவ்வாறு உரிய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாத தேர்வர்களின் உரிமைகோரல் (claim)/ விண்ணப்பம் நிராகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
IT Jobs: அரியர்ஸ் இருந்தாலும் வேலை.. ஏப்ரல் 13ம் தேதி சென்னை எச்சிஎல்-யில் இண்டர்வியூ -
IT Jobs:ஐடி வேலை ரெடி.. அழைக்கும் TCS நிறுவனம். ஏப்ரல் 18 ம் தேதி சென்னையில் இண்டர்வியூ -
IT Jobs: டிகிரி முடிக்காதவர்களுக்கும் வேலை.. அழைக்கும் HCL..ஏப்ரல் 14ல் சென்னையில் இண்டர்வியூ -
குஷ்பு ஜிம்னாஸ்டிக் சாம்பியன்.. சுந்தர் சிக்கு படித்துப் புரிந்து கொள்ளும் அறிவு இல்லை.. பிடிஆர் -
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன் -
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன்












Click it and Unblock the Notifications