டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியானது..அரசு பணியில் அமரப்போவது யார்?
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. 10,117 பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வை 18.36 லட்சம் பேர் எழுதினர். tnpscexams.in என்ற இணையத்தளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு குரூப் 4 பதவிகளுக்கான அறிவிக்கையை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 28ம் தேதி வெளியிட்டது. 7,301 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், 22 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
கடந்த ஜூலை மாதம் 24ம் தேதி நடைபெற்ற எழுத்துத் தேர்வில், 18.5 லட்சம் பேர் கலந்து கொண்டனர். சுமார் 3.5 லட்சம் பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. முன்னதாக, தேர்வாணையம் வெளியிட்ட உத்தேச கால அட்டவணையில், தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

தாமதமான டிஎன்பிஎஸ்சி
அரசு வேலைவாய்ப்புகளில் மகளிருக்கான 30% இட ஒதுக்கீடு வழங்கும் முறையை மாற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது. இதனால், ஏற்பட்ட கால தாமதம் காரணமாக குரூப் 4 தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்தில் வெளியிடப்பட இருப்பதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்தது. ஆனாலும் ரிசல்ட் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.

சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டிங்
டிஎன்பிஎஸ்சி ரிசல்ட் எப்போது வெளியாகும் என தேர்வு எழுதியவர்கள் காத்திருந்தனர். அது தொடர்பான ஹேஸ்டேக் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆனது. இதனையடுத்து மார்ச் இறுதிக்குள் ரிசல்ட் வெளியாகும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது.

பணியிடங்கள் அதிகரிப்பு
இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப்- 4 தேர்வில் நியமனம் செய்யப்பட வேண்டிய பணியிடங்களின் எண்ணிக்கையை 7,381லிருந்து 10,117ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. திருத்தப்பட்ட அறிவிப்பின் படி, கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் 274-ல் இருந்து 425 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தட்டச்சர் காலியிடங்கள் எண்ணிக்கை 2,108-ல் இருந்து 3311 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி ரிசல்ட் வெளியானது
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுதியவர்கள் 8 மாதங்கள் காத்திருந்த நிலையில் இப்போது ரிசல்ட் வெளியாகியுள்ளது. 10,117 பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வை 18.36 லட்சம் பேர் எழுதியிருந்தனர். டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகளை tnpscexams.in என்ற இணையத்தளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications