டிஎன்பிஎஸ்சி குரூப் VII-B.. இந்து சமய அறநிலையத்துறையில் வேலை.. கல்வித்தகுதி - முழு விவரம்
இந்து சமய அறநிலையத்துறையில் வேலைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்து சமயத்தை பின்பற்றுபவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் VII-B (தமிழ்நாடு இந்து சமய அறநிலைய சார்நிலைப் பணி) செயல் அலுவலர் நிலை - III பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை வேலைக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in / www.tnpscexams.in ஆகிய தேர்வாணையத்தின் இணையதளங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
தமிழ்நாடு இந்திய சமய அறநிலைய சார்நிலைப் பணிக்கு இந்து சமயத்தை பின்பற்றுபவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். செயல் அலுவலர் பதவிக்கு மொத்தம் 42 இடங்கள் காலியாக உள்ளன. சம்பளம் ரூ . 20,600-75900.

விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய இறுதி நாள் 17.06.2022. எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் : 10.09.2022. பட்டதாரிகள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்களின் உத்தேசப் பட்டியல் தயாரிக்கபபடும் . காலிப்பணியிடங்கள், இடஒதுக்கீடு ஆகியவற்றின் அடிப்படையில் தரவரிசையின் படி மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.
இதே போல தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் Group 8 அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்து சமய அறநிலையத்துறையில் TNPSC Group 8 அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம். டிஎன்பிஎஸ்சி, எக்ஸிகியூட்டிவ் ஆபிசர் Grade IV பதவிகளுக்கு இந்து மதத்தைச் சார்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.
மொத்தம் 36 எக்ஸிகியூட்டிவ் ஆபிசர் Grade 4 காலிப் பணியிடங்களை இந்த வேலைவாய்ப்பு மூலம் TNPSC நிரப்ப உள்ளது. ஆன்லைன் விண்ணப்பப் படிவம் டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 18.06.2022 வரை கிடைக்கும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications