குரூப் 2, 2ஏ தேர்வர்களுக்கு கடைசி சான்ஸ்.. இதை செய்யலன்னா அவ்ளோதான்.. டிஎன்பிஎஸ்சி முக்கிய அட்வைஸ்
சென்னை: துணை வணிகவரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், உதவியாளர், தணிக்கை ஆய்வாளர், முழுநேர விடுதி காப்பாளர் என குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுகளில் மொத்தமாக 2,327 காலி பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான முதன்மை தேர்வு ரிசல்ட் வெளியிடப்பட்ட நிலையில் தற்போது முதன்மைத் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி எனப்படும் அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக நிரப்பப்படுகிறது. குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 உள்ளிட்ட நிலைகளில் உள்ள பணியிடங்களை உரிய தேர்வு நடத்தி டிஎன்பிஎஸ்சி நிரப்பி வருகிறது.

குரூப் 2, 2ஏ தேர்வு
துணை வணிகவரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார்பதிவாளர் நிலை-2, தனிப்பிரிவு உதவியாளர், உதவிப்பிரிவு அலுவலர், வனவர் ஆகிய குரூப் 2 பதவிகளுக்கு 507 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன.
அதேபோல், உதவியாளர், தணிக்கை ஆய்வாளர், முழுநேர விடுதி காப்பாளர், முதுநிலை ஆய்வாளர், நேர்முக எழுத்தர், கணக்கர் உள்ளிட்ட பல்வேறு குரூப் 2ஏ பதவிகளில் சுமார் 1820 காலி பணியிடங்கள் என மொத்தமாக 2327 காலி பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டது.
இதற்கான முதன்மைத் தேர்வு முடிவு கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி வெளியான நிலையில், முதன்மைத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் தான் முதன்மைத் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி கூறியிருப்பதாவது:-
சான்றிதழ் பதிவேற்றம் செய்யவில்லை
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்: 11/2025, நாள்: 15.07.2025-ன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளில் (தொகுதி II மற்றும் IIA பணிகள்) அடங்கியுள்ள பதவிகளுக்கான முதல் நிலைத் தேர்வு 28.09.2025 மு.ப தேதியில் நடைபெற்றது.
இதற்கான முதன்மைத் தேர்வு 08.02.2026 மு.ப (தொகுதி IIA பணிகள்) மற்றும் 08.02.2026 அன்று தமிழ் தகுதித் தேர்வு, மேலும் 22.02.2026 மு.ப (தொகுதி II பணிகள்) தேர்வும் நடைபெற உள்ளது. ஆனால், இதுவரை 766 விண்ணப்பதாரர்கள் முதன்மைத் தேர்வு கட்டணம் செலுத்தவில்லை மற்றும் 113 மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள் தங்கள் உரிய மாற்றுத்திறனாளி சான்றிதழை பதிவேற்றம் செய்யவில்லை.
காலவரம்பு இனி நீட்டிக்கப்படாது
எனவே, அவர்களுக்கு வாய்ப்பளிக்கும் பொருட்டு OTR காலம் 30.12.2025 காலை 12.00 மணி முதல் 02.01.2026 இரவு 11.59 மணி வரை (அதாவது 4 நாட்கள்) நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்கள் முதன்மைத் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும் என்றும், தேர்வர்கள் உரிய மாற்றுத்திறனாளி சான்றிதழை தேர்வாணையத்தின் இணையதளமான **http://www.tnpsc.gov.in**-ல்
பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், காலவரம்பு இனி நீட்டிக்கப்படமாட்டாது.
-
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications