For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரூ.71,900 மாதஊதியம்.. 761 ரோடு இன்ஸ்பெக்டர் பணி தயார்.. விண்ணப்பிக்க ரெடியா? டிஎன்பிஎஸ்சி அழைப்பு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் காலியாக உள்ள 761 ரோடு இன்ஸ்பெக்டர் பணிகள் உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. அதன்படி மாதம் குறைந்தபட்சம் ரூ.19,500 முதல் அதிகபட்சமாக ரூ.71,900 சம்பளம் வழங்கப்பட உள்ளது என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி எனும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நிரப்பப்பட்டு வருகிறது. தற்போது டிஎன்பிஎஸ்சி சார்பில் காலியாக உள்ள பல்வேறு அரசு பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி சார்பில் தேர்வுகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் இன்று புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

பாஜகவில் அடுத்த பஞ்சாயத்து.. அதிமுகவில் இணைந்தாரா கல்யாணராமன்? அண்ணாமலையின் உறவினர் என காயத்ரி சாடல் பாஜகவில் அடுத்த பஞ்சாயத்து.. அதிமுகவில் இணைந்தாரா கல்யாணராமன்? அண்ணாமலையின் உறவினர் என காயத்ரி சாடல்

 காலியிடங்கள் எவ்வளவு?

காலியிடங்கள் எவ்வளவு?

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் காலியாக ரோடு இன்ஸ்பெக்டர் (சாலை ஆய்வாளர்) பிரிவில் காலியாக உள்ள 761 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பணியமர்த்தப்பட வாய்ப்பு உள்ளது.

வயது வரம்பு என்ன?

வயது வரம்பு என்ன?

ரோடு இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் 37 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பானது 01.07.2023 தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வயது வரை சலுகை வழங்கப்படும் நிலையில், முன்னாள் படைப்பிரிவினர் 50 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்சி(ஏ), எஸ்டி, எம்பிசி/டிசி, பிசி(ஓபிசிஎம்), பிசிஎம் பிரிவினருக்கு வயது வரம்பு என்பது கிடையாது

கல்வி தகுதி - மாத சம்பளம் என்ன?

கல்வி தகுதி - மாத சம்பளம் என்ன?

அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்திலிருந்து Civil Draughtsmenship ஐடிஐ சான்று பெற்றிருக்க வேண்டும். சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்தவர்களுக்கு முன்னுரிமையும், அதற்கு நிகரான படிப்பை முடித்தவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.19500 சம்பளம் வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ.71,900 சம்பளம் வரை கிடைக்கும்.

 விண்ணப்பம் செய்வது எப்படி?

விண்ணப்பம் செய்வது எப்படி?


தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் பிப்ரவரி மாதம் 11ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்ய பிப்ரவரி 16ம் தேதி முதல் 18 ம் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு விண்ணப்பம் செய்பவர்கள் எழுத்து தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

 விண்ணப்ப கட்டணம் எவ்வளவு?

விண்ணப்ப கட்டணம் எவ்வளவு?

மேலும் விண்ணப்பம் செய்பவர்களுக்கு ஒருமுறை பதிவு கட்டணமாக ரூ.150, தேர்வுக்கட்டணமாக ரூ.100 என மொத்தம் ரூ.250 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூடி பிரிவினருக்கு தேர்வு கட்டணம் கிடையாது. பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here

பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here

English summary
Tamil Nadu Rural Development and Panchayat Raj Department has 761 Road Inspector Jobs Vacancy. The notification for filling these posts has been released today. Accordingly, TNPSC has announced that the monthly minimum salary will be Rs.19,500 to maximum Rs.71,900.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X