For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டிகிரி முடிச்சிட்டு சப் இன்ஸ்பெக்டர் கனவுடன் இருக்கீங்களா.. அப்ப இது உங்களுக்குத்தான்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பல் தேர்வு நடத்தப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் பிரிவில் 144 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் தாவல் உதவி ஆய்வாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மொத்தம் 144 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. விருப்பம் உள்ளவர்கள் ஏப்ரல் 7ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். பதவியின் பெயர் Sub Inspectors of Police. மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 444 ஆகும்.

தமிழ்நாடு உள்ளாட்சி பதவியேற்பில் பல இடங்களில் தகராறு: அடிதடி, கூட்டணிக்கு ஒதுக்கிய இடத்தில் போட்டிதமிழ்நாடு உள்ளாட்சி பதவியேற்பில் பல இடங்களில் தகராறு: அடிதடி, கூட்டணிக்கு ஒதுக்கிய இடத்தில் போட்டி

வயது தகுதி

வயது தகுதி

காவல் உதவி ஆய்வாளர் (தாலுகா) Sub Inspectors of Police (Taluk) 399 (ஆண்- 279, பெண்/ திருநங்கை- 120). காவல் உதவி ஆய்வாளர் (ஆயுதப்படை) Sub Inspector (Armed Reserve) 45 (ஆண்- 32, பெண்/ திருநங்கை- 13). வயது தகுதி- ஜூலை 1ஆம் தேதி அன்று 20 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். பிசி, பிசி முஸ்லிம், எம்பிசி/DNC பிரிவினர் 32 வயது வரையிலும், SC, SC (A), (ST) மற்றும் திருநங்கைகள் 35 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் எவ்வளவு

சம்பளம் எவ்வளவு

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ 36,900- 1,16,600 வரை வழங்கப்படும். இந்த பணிகளுக்கு எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

எத்தனை மதிப்பெண்கள்

எத்தனை மதிப்பெண்கள்

எழுத்துத் தேர்வு இரு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இது 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. இதில் குறைந்தபட்சம் 40 மதிப்பெண்களை பெறவேண்டும். இல்லாவிட்டால் இரண்டாம் பகுதி மதிப்பீடு செய்யப்படாது. இரண்டாம் பகுதியில் பொது அறிவு மற்றும் உளவியல் சார்ந்த வினாக்கள் கேட்கப்படும்.

நேர்முகத் தேர்வு

நேர்முகத் தேர்வு

இது 70 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். எழுத்துத் தேர்வு அப்ஜெக்டிவ் டைப் வினாக்கள் அடங்கியதாக இருக்கும். எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றுகள் சரிபார்க்கப்பட்டு அவர்கள் உடற்தகுதி தேர்வு நடைபெறும். இது 15 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறுவோர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். அதற்கு 10 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

 விண்ணப்பிப்பது எப்படி?

விண்ணப்பிப்பது எப்படி?

விண்ணப்பக் கட்டணம் ரூ 500 ஆகும். https://si2022.onlineregistrationform.org/TNU/LoginAction_input.action என்ற லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும். அறிவிக்கை தொடர்பான விவரங்களை அறியhttps://tnusrb.tn.gov.in/pdfs/informationbrochuresubinspectorofpolice.pdf என்ற லிங்கை பார்க்கலாம்.

English summary
Tamilnadu Uniformed Service Recruitment Board commences exam for 144 vacancies for the post of Sub Inspector.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X