போனா வராது..பொழுது போனா கிடைக்காது! கைநிறைய சம்பளம்.. தமிழக அரசு போக்குவரத்து கழக வேலை! இன்றே கடைசி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள 3274 ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்களுக்கு கடந்த மார்ச் 21ஆம் தேதி முதல் விண்ணப்பம் பெறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்தப் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் எனவே போக்குவரத்து கழக பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் இன்று மாலை 6:00 மணி வரை விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்னமும் தனியார் பேருந்து சேவை இல்லாத நிலையில் அரசு பேருந்து சேவை தான் மக்களுக்கு மிக முக்கியமானதாக இருக்கிறது. நாள் ஒன்றுக்கு 20,000 மேற்பட்ட பேருந்துகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்களை சுமந்து பயணிக்கின்றன. குறிப்பாக கடைக்கோடி கிராமங்களுக்கும் மலைப்பகுதிகளுக்கும் அரசு பேருந்து சேவை தான் வரப்பிரசாதமாக உள்ளது.

மேலும் ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் இலவச பஸ் பாஸ், மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகை, பெண்களுக்கு இலவசப் பயணம் என அரசு பேருந்து சேவையை மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

Jobs Tamil Nadu Transport

தமிழகத்தை பொறுத்தவரை ஏராளமான போக்குவரத்துக் கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. சென்னை பெருநகர் போக்குவரத்துக் கழகம், அரசு விரைவு போக்குவரத்து கழகம், அது மட்டுமல்லாமல் விழுப்புரம், சேலம், மதுரை, நெல்லை, கோவை ஆகிய கோட்டங்களின் தினந்தோறும் 17,000 அரசு பேருந்துகள் சுமார் 18000 கிராமங்களுக்கு தினந்தோறும் இயக்கப்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு கோடிக்கணக்கான மக்கள் அரசு பேருந்துகளில் பயணம் செய்கிறார்கள். தமிழக முழுவதும் உள்ள அரசு போக்குவரத்துக் கழகங்களில் சுமார் ஒரு லட்சத்து 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்வதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சில வருடங்களாகவே அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாளர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது இதனால் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டுமென கோரிக்கை இழந்தது இந்த நிலையில் போக்குவரத்துக் கழகங்களில் காலியாக இருக்கும் 3274 பணியிடங்களை நிரப்ப கடந்த மார்ச் 21ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பான அறிவிப்பில்," தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களின் 8 கோட்டங்களில் 3,274 ஓட்டுநா் உடன் நடத்துநா் (டிசிசி) பணியிடங்களுக்கு www.arasubus.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அதன்படி, மாநகர போக்குவரத்துக் கழகத்தில் 364, விரைவு போக்குவரத்துக் கழகத்தில் 318, விழுப்புரம் கோட்டத்தில் 322, கும்பகோணம் கோட்டத்தில் 756, சேலம் கோட்டத்தில் 486, கோவை கோட்டத்தில் 344, மதுரை கோட்டத்தில் 322, திருநெல்வேலி கோட்டத்தில் 362 பணியிடங்கள் என மொத்தம் 3274 பணியிடங்களுக்கு

ஜூலை 1-ஆம் தேதி 24 வயது பூா்த்தியாகியிருப்போா் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரா்கள் பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருப்பதுடன், தமிழில் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். செல்லத்தக்க கனரக வாகன ஓட்டுநா் உரிமம், குறைந்தபட்சம் 18 மாத முன்அனுபவம், முதலுதவிச் சான்று, பொதுப்பணி வில்லை, செல்லத்தக்க நடத்துநா் உரிமம் ஆகியவை வைத்திருக்க வேண்டும்.

மேலும், குறைந்தபட்சம் 160 செ.மீ. உயரம், 50 கிலோ எடை இருக்க வேண்டும். அரசு விதிப்படி இடஒதுக்கீடு வழங்கப்படும். பணிக்கான தகுதியும் விருப்பமும் உடையவா்கள் வங்கி சேவை கட்டணம் நீங்கலாக ரூ.1,180 செலுத்தி ஏப்.21-க்குள் விண்ணப்பத்தை இணையவழியில் பதிவு செய்ய வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினா் ரூ.590 செலுத்த வேண்டும். விண்ணப்பதாரா்கள் எழுத்து, செய்முறை, நோ்முகத் தோ்வுகள் மூலம் தோ்ந்தெடுக்கப்படுவாா்கள். தோ்வு குறித்த விவரங்கள் விண்ணப்பப் பதிவு இணையதளத்தில் அவ்வப்போது வெளியாகும்" என கூறப்பட்டிருந்தது.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. மார்ச் 21ஆம் தேதி முதல் ஏப்ரல் 21ம் தேதியான இன்று வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் இன்று மாலை 6 மணியுடன் விண்ணப்பிக்க கால அவகாசம் ஓய்கிறது. இதை அடுத்து விண்ணப்பதாரர்கள் இன்று மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆறு மணிக்கு மேல் என்ற www.arasubus.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்க முடியாது எனக் கூறுகின்றனர் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+