2,708 உதவி பேராசிரியர்கள் காலியிடங்கள்.. அரசு கல்லூரிகளில் ரூ.1.82 லட்சம் சம்பளம்.. நவ.10 கடைசி நாள்
சென்னை: தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2,708 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு நாளை முதல் நவம்பர் 10ம் தேதி வரை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பம் செய்யலாம் என்று இன்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக ரூ.57,700 முதல் ரூ.1 லட்சத்து 82 ஆயிரத்து 400 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
இதுபற்றி தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: அரசாணை நிலை எண். 230 மற்றும் 231,உயர் கல்வித் (F2) துறை, நாள் 06.10.2025-ன்படி, அரசு கலை மற்றும் அறிவியல்கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கான 4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு கடந்த 14.03.2024 அன்று வெளியிடப்பட்ட அறிவிக்கைஎண் 01.2024 ரத்து செய்யப்பட்டுள்ளது.

தற்போது ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் https;//www.trb.tn.gov.in வாயிலாக மேற்குறிப்பிடப்பட்டுள்ள கல்லூரிகளுக்கான 2,708 உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்களை நேரடி நியமன முறையில் நிரப்புவதற்கான புதிய அறிவிக்கை எண் 04/2024 இன்று (16.10.2025) வெளியிடப்படுகிறது.
பாடவாரியான காலிப்பணியிட விவரங்கள், கல்வி தகுதி, வயது மற்றும் விண்ணப்பம் செய்வதற்கான அனைத்து விவரங்களும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும் விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க 17.10.2025 முதல் 10.11.2025 வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவிக்கை எண் 12/2019 நாள் 28.08.2019 மற்றும் 04.10.2019 மற்றும் அறிவிக்கை எண் 02/2024 நாள் 14.03.2024 ன் படி விண்ணப்பித்த பணிநாடுநர்கள் இப்புதிய அறிவிக்கையின் கீழ் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். இவர்களுக்கு மட்டும் இப்புதிய விண்ணப்பத்திற்கான தேர்வு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களித்தும் மற்றும் வயது வரம்பில் தளர்வும் வழங்கப்படுகிறது'' என கூறப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு மாத சம்பளமாக ரூ.57,700 முதல் ரூ.1 லட்சத்து 82 ஆயிரத்து 400 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி நவம்பர் 10 ஆகும். அதன்பிறகு நவம்பர் 11 முதல் நவம்பர் 13ம் தேதி வரை எடிட் செ்ய வாய்ப்பு வழங்கப்படும். அதன்பிறகு டிசம்பர் 20ம் தேதி தேர்வு(Tentative) நடைபெற உள்ளது.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 01.07.2025 என்ற தேதியின்படி 57 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பம் செய்வோர் மாஸ்டர் டிகிரியை 55 சதவீத மதிப்பெண்ணுடன் முடித்திருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி என்றால் 50 சதவீதத்துடன் முடித்து நெட், ஸ்லெட் தேர்வுகளில் தேர்ச்சியடைந்து இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பிஎச்டி படிப்பை முடித்திருக்க வேண்டும்.
பாட வாரியான காலியிடங்கள் மற்றும் பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்த Click Here லிங்கை கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம்.
-
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications