தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணிக்கான தேர்வு மீண்டும் ஒத்திவைப்பு.. காரணம் என்ன?
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணிகளுக்கான எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது என்று மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தெரிவித்து உள்ளார். தூத்துகுடி மாவட்டத்தில் மொத்தம் 77 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியிருந்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், சாத்தான்குளம், கோவில் பட்டி உள்ளிட்ட 9 வட்டங்களில் காலியாக உள்ள 77 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதற்கான எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வு தேதியை மாவட்ட நிர்வாகம் அறிவித்து இருந்தது.

கிராம உதவியாளர் பணி
இந்த நிலையில், தற்போது தேர்வுகளை ஒத்திவைப்பதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளர். ஏற்கனவே வயது வரம்பு உயர்த்தப்பட்டதால் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள், மறு அறிவிப்பு வெளியிடப்பட்டு மீண்டும் நடைபெறுவதாக இருந்த நிலையில் தற்போது மறுபடியும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது தேர்வர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. தேர்வுகள் ஒத்திவைப்பு தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு பின்வருமாறு:-
கலெக்டர் அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலகில் ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், ஏரல், சாத்தான்குளம், கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் மற்றும் கயத்தார் ஆகிய 9 தாலுகாக்களில் 2025-ம் ஆண்டு கிராம உதவியாளர் பணி நியமனம் தொடர்பாக உச்சபட்ச வயது வரம்பு மறுவரையறைக்கு பின்னர், 01.11.2025 முதல் 15.11.2025 வரையிலும் தாலுகா அலுவலகங்களில் நேரிலும் மற்றும் தபால் மூலமாகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இதைத் தொடர்ந்து 17.12.2025 (புதன்கிழமை) அன்று கிராம உதவியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வும், அதனைத் தொடர்ந்து 02.01.2026 (வெள்ளிக்கிழமை) அன்று முதல் நேர்முகத் தேர்வும் நடைபெற இருந்தது. இந்த எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அனைத்தும் நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்படுகிறது. எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
காலிப்பணியிடங்கள்:
ஏரல் - 02,
எட்டயபுரம் - 10,
கயத்தாறு தாலுகா - 21,
கோவில்பட்டி - 07,
ஓட்டப்பிடாரம் தாலுகா - 05,
சாத்தான்குளம் - 08,
ஸ்ரீவைகுண்டம் - 04,
திருச்செந்தூர் - 07,
விளாத்திகுளம் - 13
கல்வித் தகுதி:
10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணபிக்க முடியும். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் தாலுகாவில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.
சம்பளம் எவ்வளவு?
சிறப்பு காலமுறை ஊதியம் லெவல் 06-படி மாதம் ரூ.11,100 - ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications