Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

4 நாட்கள்தான் இருக்கிறது..உடனே மாறுங்க! பென்சன் திட்டம் மாற நினைக்கிறீங்களா? அரசு தரும் கடைசி சான்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தேசிய ஓய்வூதியத் திட்ட (NPS) சந்தாதாரர்கள், ஒருங்கிணந்த ஓய்வூதியத் திட்டத்தில் (UPS) சேருவதற்கான விண்ணப்பங்களை நவம்பர் 30, 2025-க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என நிதி அமைச்சகம் நினைவூட்டியுள்ளது. இத்திட்டம் ஜனவரி 24, 2025 அன்று அறிவிக்கப்பட்டு, ஏப்ரல் 1, 2025 முதல் நடைமுறைக்கு வந்தது.

சந்தைப் பங்கு மதிப்புகளுடன் தொடர்புடைய NPS-க்கு மாற்றாக, முன்கூட்டியே கணிக்கக்கூடிய ஓய்வூதியத் திட்டத்தை விரும்பும் அரசு ஊழியர்களுக்கு இது ஒரு விருப்பத் தேர்வாக உள்ளது. இத்திட்டம் கட்டாயமல்ல; இது வரையறுக்கப்பட்ட பலன்களைக் கொண்ட திட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது உத்தரவாதமான, பணவீக்கத்திற்கு ஏற்ற ஓய்வூதியத்தை உறுதி செய்கிறது.

Union Government asks employees who want to change Unified Pension Scheme rush up

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்

இத்திட்டத்தின்படி, குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணிபுரிந்த ஊழியர்கள், கடைசி 12 மாத சேவைக்காலத்தின் சராசரி அடிப்படைச் சம்பளத்தில் 50% ஓய்வூதியம் பெறத் தகுதியுடையவர்கள். இது பணிக்கொடை (gratuity) மற்றும் குடும்ப ஓய்வூதியத்தையும் (family pension) வழங்குகிறது. இது முந்தைய ஓய்வூதியத் திட்டத்தின் அம்சங்களை NPS கட்டமைப்பிற்குள் கொண்டு வருகிறது.

UPS திட்டத்தின் முக்கிய அம்சம், அதன் வருமான உறுதித்தன்மை. NPS திட்டத்தில் சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப ஓய்வூதியத் தொகைகள் மாறுபடும். ஆனால் UPS திட்டத்தில், நிதிச் சந்தையின் ஏற்ற இறக்கங்களால் ஓய்வூதியப் பலன்கள் பாதிக்கப்படாது.

ஓய்வூதியம் முக்கியம்

சந்தாதாரர்கள் தங்கள் விருப்பத்தைப் பதிவு செய்ய இரண்டு வழிகள் உள்ளன. மத்தியப் பதிவேட்டுக் கழகத்தின் (CRA) ஆன்லைன் அமைப்பு வழியாக அல்லது நியமிக்கப்பட்ட நோடல் அலுவலகங்களில் நேரடியாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பங்கள் எந்த வழியில் சமர்ப்பிக்கப்பட்டாலும், அனைத்து விண்ணப்பங்களையும் குறிப்பிட்ட நடைமுறைகளின்படி செயலாக்குமாறு நிதி அமைச்சகம் அந்த அலுவலகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

UPS திட்டம் கூடுதல் வரிச் சலுகைகள் மற்றும் ராஜினாமா, கட்டாய ஓய்வு போன்ற சூழ்நிலைகளுக்கான சிறப்பு விதிகளை வழங்குகிறது. NPS-ல் இருந்து மாறும் ஊழியர்கள் நிரந்தரமாக சிக்கிக்கொள்ள மாட்டார்கள். தேவைப்பட்டால், எதிர்காலத்தில் மீண்டும் NPS-க்கு மாறவும் அவர்களுக்கு அனுமதி உண்டு. இத்திட்டம் தற்போது பணியில் உள்ளவர்களுக்கு மட்டுமல்லாமல், NPS திட்டத்தின் கீழ் தகுதியுள்ள ஓய்வு பெற்றவர்களுக்கும் பொருந்தும்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தின் முழுப் பலன்களையும் பெற, தகுதியுள்ள அனைவரும் நவம்பர் 30-ம் தேதிக்குள் தங்கள் விண்ணப்பங்களைப் பதிவு செய்யுமாறு அரசு வலியுறுத்தியுள்ளது.

குறைவான நபர்களே ஆர்வம்

தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (NPS) இருந்து ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு (UPS) இதுவரை வெறும் 4 சதவிகித மத்திய அரசு ஊழியர்களே மாறி உள்ளதாக கூறப்டுகிறது. மத்திய அரசு எதிர்பார்த்ததை விட இது மிக குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய ஓய்வூதியத் திட்டத்திலிருந்து (NPS) ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு (UPS) மாறுவதற்கான காலக்கெடுவை மத்திய அரசு நவம்பர் 30 வரை நீட்டித்துள்ளது. இதனால், மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் இறந்த ஊழியர்களின் வாழ்க்கைத் துணைவர்கள் இத்திட்டத்திற்கு மாற அவகாசம் கிடைத்துள்ளது.

நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஊழியர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை ஏற்று இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஏப்ரல் 1, 2025 அன்று அமலுக்கு வந்தது.

முன்னதாக, ஏப்ரல் 1, 2025 அன்று பணியில் இருந்த ஊழியர்கள், தகுதியுள்ள ஓய்வூதியதாரர்கள், மற்றும் இறந்த ஓய்வூதியதாரர்களின் வாழ்க்கைத் துணைவர்கள் ஜூன் 30 வரை விண்ணப்பிக்க அவகாசம் பெற்றனர். பின்னர், இந்தக் காலக்கெடு செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டிருந்தது.

மத்திய அரசில் ஏப்ரல் 1, 2025 அன்று அல்லது அதற்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்கள் தங்கள் படிவங்களை நேரடியாகவோ அல்லது பயிற்சி நிலையத் தலைவரிடமோ சமர்ப்பிக்க வேண்டும். இந்தப் படிவங்கள் DDO-க்கு அனுப்பப்பட்டு, நிரந்தர ஓய்வூதிய கணக்கு எண் (PRAN) உருவாக்கப்படும்.

புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திலிருந்து தேசிய ஓய்வூதிய அமைப்புக்கு (NPS) ஒரே ஒரு முறை மட்டுமே மாற நிதி அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. ஓய்வுபெறுவதற்கு ஒரு வருடத்திற்கு முன்போ அல்லது விருப்ப ஓய்வுக்கு மூன்று மாதங்கள் முன்போ இந்த மாற்றத்தைச் செய்யலாம். ஒரு முறை ஓய்வூதிய முறையை மாற்றிய பிறகு, மீண்டும் அதை மாற்ற முடியாது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+