மத்திய அரசு அதிகாரி ஆகணுமா? டிகிரி முடித்தவர்களுக்கு செம சான்ஸ்! யுபிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு!
சென்னை: மத்திய பணியாளர் தேர்வு ஆணையமான யுபிஎஸ்சி, அமலாக்க அதிகாரி / கணக்கு அதிகாரி மற்றும் உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையர் பதவிகளுக்கு காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 230 பணியிடங்கள் நிரப்பப் படுகிறது. இந்த பணியிடங்களுக்கு விண்ணபிப்பதற்கான தகுதிகள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 1,77,500 வரை சம்பளம் வழங்கப்படும்.
மத்திய அரசில் உயர் பொறுப்பு உள்ள அதிகாரி பணியிடங்களை மத்திய பணியாளர் தேர்வு ஆணையமான யுபிஎஸ்சி நிரப்பி வருகிறது. ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் மட்டுமின்றி பல்வெறு துறைகளில் உள்ள அதிகாரி பணியிடங்களும் யுபிஎஸ்சி மூலம் நிரப்பபடுகிறது. அரசு விதிகளின்படி உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு போட்டி தேர்வுகளுக்கு பிறகு பணியிடங்கள் நிரப்பபடுகிறது. அந்த வகையில் தற்போது 230 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்டவற்றை பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:
1. அமலாக்க அதிகாரி / கணக்கு அதிகாரி - 156
2. உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையர் - 74
என மொத்தம் 230 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வித் தகுதி:
அமலாக்க அதிகாரி / அக்கவுண்ட்ஸ் ஆபிசர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் அங்கீகரிக்கபட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்று இருந்தால் போதும்.
உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையர் பணிக்கு டிகிரி முடித்து இருக்க வேண்டும். கம்பெனி சட்டம் / தொழிலாளர் சட்டம், பொது நிர்வாகம் ஆகிய படிப்புகள் முடித்து இருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும்.
வயது வரம்பு:
18.08.2025 தேதிப்படி அமலாக்க அதிகாரி பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். உதவி வருங்கால வைப்பு ஆணையர் பணிக்கு 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிகளை பின்பற்றி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். அதாவது, எஸ்சி/எஸ்டி பிரிவினர் என்றால் ஐந்து ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம் எவ்வளவு:
1. அமலாக்க அதிகாரி / கணக்கு அதிகாரி - மாதம் ரூ.47,600 - ₹1,51,100 வரை வழங்கப்படும்.
2. உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையர் - ₹56,100 - ₹1,77,500 வரை வழங்கப்படும்.
தேர்வு முறை;
போட்டி தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகியவை அடிப்படையின் தகுதியான தேர்வர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பினை முழுமையாக படித்து தெரிந்து கொண்ட பிறகு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ.25 செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி / எஸ்டி மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பிரிவினருக்கு கட்டணம் கிடையாது. விண்ணப்பிக் அவகாசம் தொடங்கும் நாள்; 29.7.2025 ஆகும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.08.2025 ஆகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://upsconline.nic.in/
-
காஞ்சிபுரத்தில் சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணி.. 39 காலியிடங்கள்! சூப்பர் சான்ஸ் -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications