Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ.30 கோடி சம்பளம்.. உலகிலேயே கஷ்டமான வேலை இதுதான்.. அப்படி என்னதான் செய்யனுமாம் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: வருடத்திற்கு 30 கோடி ரூபாய் சம்பளம் கிடைக்கும் ஒரு வேலைக்கு ஆள் கிடைக்காமல் தடுமாறுகிறார்களாம். இவ்வளவு சம்பளம் கொடுத்தும் கூட ஆள் கிடைக்காமல் தடுமாறும் அளவுக்கு அப்படி என்ன வேலையாக இருக்கும் என நீங்கள் நினைக்கலாம். அப்படி என்னதான் வேலை.. எங்கு உள்ளது.. ஏன் இந்த வேலைக்கு ஒரு ஆள் கூட கிடைப்பது இல்லை என்பது பற்றிய சுவாரசிய தகவல்களை பார்க்கலாம்.

ஒரே ஒரு விளக்கை எரிய வைத்தால் போதும்.. ஆண்டுக்கு 30 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? நீங்கள் நம்பவில்லை என்றாலும்கூட உண்மையாகவே அப்படி ஒரு அருமையான வேலை வாய்ப்பு உள்ளது. ஆனால் உலகம் முழுக்க வலை வீசியும் இந்த வேலைக்கு ஆள் கிடைக்கவில்லையாம். அதுவும் ஒரே ஒரு ஆள் கிடைக்கவே திண்டாடுகிறார்களாம்..

Job Employment lighthouse

கவுண்டமணி செந்தில் காமெடி போல்

இப்போதே நீங்கள் கொஞ்சம் யூகித்து இருக்கலாம். அதாவது விஜயகாந்தின் சேதுபதி ஐபிஎஸ் படத்தில் செந்தில் கவுண்டமணியை கப்பலில் வேலை வாங்கி தருவதாகவும் மாதம் 10 ஆயிரம் சம்பளம் என்றும் ஆசை காட்டுவார். இதை நம்பி கவுண்டமணியோ.. இருக்கிற வேலையை விட்டுவிட்டு கப்பல் வேலை கனவுடன் செல்வார். அப்போதுதான் செந்தில், கவுண்டமனிக்கு கப்பலில் என்ன மாதிரியான வேலை என்பதை சொல்வார்.

30 கோடி ரூபாய் சம்பளம்

செந்தில் சொல்வதை கேட்டதும், அவரை ஓட ஓட அடித்து விரட்டுவார் கவுண்டமணி. இன்றளவும் ரசிக்க கூடிய இந்த காமெடி சம்பவம் போலத்தான் என இந்த 30 கோடி ரூபாய் வேலையும் இருக்குமோ என நீங்கள் நினைத்து இருக்கலாம். இது அப்படியே பொருந்தாது என்றாலும் கிட்டத்தட்ட அதுபோன்றதொரு வேலைக்குதான் வருடம் 30 கோடி கொடுக்கிறார்கள். அப்படி என்னதான் வேலை என சீக்கிரம் சொல்லுங்க என நீங்கள் நினைப்பது புரிகிறது.. இது குறித்த விவரம் வருமாறு:-

எகிப்து தீவு அருகே அலெக்ஸாண்டரியா என்ற தீவு உள்ளது. இந்த தீவில் பாரோஸ் என்றறொரு கலங்கரை விளக்கம் உள்ளது. இந்த கலங்கரை விளக்கத்திற்கு பின்னால் ஒரு சுவாரசிய பின்னணியும் உள்ளது. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பாக மோரோசியஸ் என்ற கப்பல் மாலுமி அலெக்ஸாண்டரியா தீவு அருகே கடல் பயணம் மெற்கொண்டு இருந்துளார். அப்போது புயல், கடல் சீற்றத்தால் கப்பல் விபத்துக்குள்ளானது. கப்பல் விபத்துக்குள்ளான இடத்தில் பெரிய பாறைகள் இருந்தது. இதன் காரணமாக இனிமேல் இங்கு விபத்து ஏற்படாமல் தடுக்கும் வகையில் கலங்கரை விளக்கம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கப்பல்களை எச்சரிக்கும் வகையில்

இதில் கப்பலில் பயணம் செய்தவர்கள் பலியானதோடு, மதிப்பு மிக்க பொருட்களும் கடலில் விழுந்தன. இந்த பேரழிவு விபத்துக்கு பிறகு அப்பகுதியில் உள்ள ஆபத்தை பிற கப்பல்களுக்கு காட்டும் விதமாக உடனடியாக ஒரு கலங்கரை விளக்கம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து அப்போது அங்கு ஆட்சி செய்து வந்த அலெக்ஸாண்டரியா என்பவர், கடலுக்கு நடுவே மிக உயரமான ஒரு கட்டமைப்பை உருவாக்கி, பிற கப்பல்களுக்கு எச்சரிக்கை செய்யும் விதமாக அமைத்தார்.

கடினமான உழைப்புக்கு பிறகு பாரோஸ் தீவில் இந்த கலங்கரை விளக்கம் உருவானது. அலெக்ஸ்டண்டரியா துறைமுகம் அருகே உள்ள இந்த கலங்கரை விளக்கம் அக்காலத்து கட்டுமான திறனுக்கு சான்றாகவும் உள்ளது. இந்த கலங்கரை விளக்கின் உச்சியில், கப்பல்களை எச்சரிக்கும் வகையில் மிகப்பெரிய அளவில் தீ எரிந்து கொண்டு இருந்தது. பல மைல்களுக்கு அப்பால் வரும் போதே ஆபத்து பகுதி என்பதை உணர்ந்த கப்பல்கள் பாதையை மாற்றி பயணிக்க தொடங்கின.

உயிரை கையில் பிடித்து இருக்க வேண்டும்

இதனால் பல லட்சக்கணக்கான கப்பல்கள் தப்பின. இந்த கலங்கரை விளக்கத்தின் பராமரிப்பாளர் பணிக்குதான் தற்போது 30 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கிறார்களாம். அவருடைய பணி என்னவென்றால் கலங்கரை விளக்கின் உச்சத்தில் எரியும் விளக்கு அணையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இது எளிதாக தோன்றினாலும் மிகவும் கடினமான பணி என்று சொல்கிறார்கள். ஏனெனில், சுற்றிலும் கடல் மட்டுமே இருக்கும். பல மாதங்களுக்கு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒரு மனிதரை கூட பார்க்காமல் இருக்க வேண்டும்.

கடுமையான புயல் அடிக்கடி இந்த கலங்கரை விளக்கத்தை தாக்கும். மிகப்பெரிய அலைகள் சில சமயம் ஒட்டுமொத்த கலங்கரை விளக்கத்தை மூழ்கடிக்கும் அளவுக்கும் சூழும். அப்போதும் பராமரிப்பாளர் உயிரை கையில் பிடித்துக்கொண்டு உள்ளேதான் இருக்க வேண்டும். இதற்காகத்தான் இவ்வளவு சம்பளம் கொடுத்தும் கூட ஒரு சிலரே விண்ணப்பிக்க ரெடியாக இருக்கிறார்களாம்...

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+