‛‛ZOHO-வில் வேலைவாய்ப்பு’’.. சென்னையிலேயே பணி.. வெளியான புது அறிவிப்பு! உடனே விண்ணப்பிக்கலாம்
சென்னை: பிரபல ஐடி நிறுவனமான ஜோஹோவில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள ஜோஹோ நிறுவனத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.
ஜோஹோ.. தமிழகத்தில் செயல்பட்டு வரும் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த ஐடி நிறுவனத்தில் இருந்து அடிக்கடி பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

தமிழகத்தில் சென்னை, தென்காசி, உள்பட பல்வேறு இடங்களில் ஜோஹோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் சென்னையில் உள்ள ஜோஹோ நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
தற்போதைய அறிவிப்பின்படி ஜோஹோ நிறுவனத்தில் கன்டென்ட் மார்க்கெட்டர் (Content Marketer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 3 முதல் 5 ஆண்டுகள் வரை கன்டென்ட் ரைட்டர் பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மேலும் B2B/Saas தெரிந்திருக்க வேண்டும். ஆடியன்ஸை ஈர்க்கும் வகையில் கன்டென்ட் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
மேலும் கன்டென்ட் மார்க்கெட்டிங், எஸ்இஓ, கன்டென்ட் டிஸ்ட்ரிபூஷன் வொர்க் (Distribution Work) உள்ளிட்டவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சரமளாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். மேலும் கிரியேட்டிங் வெப்பேஜஸ், சோசியல் மீடியா போஸ்ட்ஸ், கஸ்டமர் கேஸ் ஸ்டடீஸ், இமெயிலர்ஸ், சேலஸ் கோலட்ரல் (Sales Collateral), அட்-காப்பிஸ் (Ad - Copies) மார்க்கெட்டி்ங மெட்டீரியல்ஸ் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் பணியமர்த்தபடுவார்கள். இந்த பணிக்கான மாத சம்பளம் அல்லது ஆண்டு ஊதியம் பற்றி தற்போதைய அதிகாரப்பூர்வ அறிவிப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஆனாலும் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் நல்ல சம்பளம் வழங்கப்பட வாய்ப்புள்ளது.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஜோஹோவின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் முடிந்தவரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்வது சிறந்ததாகும்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
IT Jobs: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் ஜூன் 13ல் இண்டர்வியூ.. சென்னையில் அசத்தலான வேலை ரெடி -
தூத்துக்குடியில் வேலை.. சுகாதார ஆய்வாளர், செவிலியர் என 44 பணியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி? -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications