Zoho-வில் அசத்தலான வேலைவாய்ப்பு.. சூப்பர் சான்ஸை மிஸ் பண்ணாதீங்க.. சென்னையில் பணி நியமனம்
சென்னை: முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக உள்ள ஜோஹோவில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி சாப்ட்வேர் டெவலப்பர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள ஜோஹோ அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
தமிழ்நாட்டில் டிசிஎஸ், அக்சென்ச்சர், எச்சிஎல் உள்பட பல முன்னணி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் இணைந்து இருப்பது தான் ஜோஹோ. தமிழ்நாட்டை தலைமையிடமாக கொண்டு இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் ஜோஹோவில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணி பற்றிய முழு விவரம் வருமாறு: ஜோஹோ ஐடி நிறுவனத்தில் இருந்து சாப்ட்வேர் டெவலப்பர் (Software Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு சாப்ட்வேர் டெவலப்பர் பிரிவில் குறைந்தபட்சம் ஓராண்டு முதல் 4 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். விண்ணப்பம் செய்வோருக்கு டெவலப், டெஸ்ட் மற்றும் புதிய சாப்ட்வேர் புரோகிராமை இம்பமென்ட் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
அதேபோல் பிழைகள் இன்றி Code எழுத தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் டிரபுள்சூட், டீபக் மற்றும் சாப்ட்வேர் புரோகிராமை மெயின்டெயினிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும். புராடெக்ட் மேனேஜ்மென்ட் டீமுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும். பிற டெவலப்பர்ஸ், டிசைனர்ஸ் உள்ளிட்டவற்றுடன் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். பணிச்சூழலுக்கு ஏற்ப விரைவாக பணியாற்ற வேண்டும். அதேபோல் புதிய டெக்னாலஜியை கற்று கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
பணிக்கான மாதசம்பளம் பற்றிய விபரம் எதுவும் தற்போதைய அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படலாம். பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படும். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி என்பது குறிப்பிடப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்ய வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு இண்டர்வியூவுக்கு அழைக்கப்படுவார்கள்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை.. 27,000 சம்பளம்.. 8ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications