Zoho வேலைவாய்ப்பு.. அனுபவம் இல்லாதவர்களுக்கு சூப்பர் சான்ஸ்.. சென்னை - மதுரை - தென்காசியில் பணி
சென்னை: ஜோஹோ ஐடி நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது சாப்ட்வேர் டெவலப்பர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு 0-2 ஆண்டு பணி அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் தமிழகத்தில் உள்ள ஏதாவது ஒரு ஜோஹோ நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக ஜோஹோ செயல்பட்டு வருகிறது. சென்னை, மதுரை, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட இடங்களில் ஜோஹோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. மேலும் பிற இடங்களிலும் ஜோஹோ நிறுவனத்தை புதிதாக அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் விரைவில் கும்பகோணத்தில் ஜோஹோ நிறுவனம் செயல்பட உள்ளது. இந்நிலையில் தான் தற்போது ஜோஹோ நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு 0 - 2 ஆண்டு பணி அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம். அதன்படி அனுபவம் இல்லாதவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஆனாலும் கூட விண்ணப்பம் செய்வோருக்கு சில முக்கிய தகுதிகள் இருக்க வேண்டும். அதன்படி விண்ணப்பம் செய்வோர் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். 2026ல் கல்லூரி படிப்பை முடிப்பவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.
பணி என்பது டிசைன், டெவலப்மென்ட், சாப்ட்வேர் டெவலமென்ட் லைப்சைக்கிள், பிழையின்றி Coding எழுதும் வகையில் இருக்கும். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவென்று குறிப்பிடப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.
இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்படுவார்கள். ஷார்ட்லிஸ்ட்டில் இடம்பெறுவோருக்கு இண்டர்வியூவுக்கான தேதி, நேரம், இடம் உள்ளிட்டவை தெரிவிக்கப்படும். அதேபோல் தேர்வாகும் நபர்கள் எங்கு நியமனம் செய்யப்பட உள்ளனர்? என்பது பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தமிழகத்தில் உள்ள ஏதாவது ஒரு நிறுவனத்தில் பணி நியமனம் இருக்கும் என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே தமிழ்நாட்டில் எந்த இடத்தில் நியமனம் செய்யப்பட்டாலும் கூட அங்கு சென்று பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். தமிழகத்தில் சென்னை, மதுரை, தென்காசியில் ஜோஹோ செயல்பட்டு வருகிறது. இதனால் 3ல் ஏதேனும் ஒரு இடத்தில் நியமனம் செய்ய அதிக வாய்ப்புள்ளது. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
அதேபோல் ஒரேநேரத்தில் ஜோஹோவின் பல்வேறு இண்டர்வியூவில் பங்கேற்றவர்களுக்கு அனுமதியில்லை. மேலும் ஜோஹோவில் தற்போது பணியாற்றி வருவோர் என்றால் இண்டர்வியூவில் அனுமதி இல்லை. இந்த 2 கண்டிஷன்களையும் கண்டிப்பாக பாலோ செய்ய வேண்டும். மீறும் பட்சத்தில் அவர்களின் நியமனங்கள் ரத்து செய்யப்படும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
IT Jobs: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் ஜூன் 13ல் இண்டர்வியூ.. சென்னையில் அசத்தலான வேலை ரெடி -
IT Jobs: நாளை காலை 11 மணிக்கு சென்னையில் இண்டர்வியூ.. அனுபவம் வேண்டாம்.. அழைக்கும் HCL -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்?












Click it and Unblock the Notifications