அனுபவம் வேண்டாம்.. கோவையில் ஐடி வேலை.. வாய்ப்பு தரும் ZOHO.. ஜூலை 31ம் தேதி கடைசி நாள்
கோவை: முன்னணி ஐடி நிறுவனமான ஜோஹோவில் இருந்து டெக்னிக்கல் சப்போர்ட் இன்ஜினியர் (Technical Support Engineer)பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய முன்அனுபவம் தேவையில்லை. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஜூலை 31ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் கோவையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
தமிழகத்தில் உள்ள முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக ஜோஹோ உள்ளது. சென்னை, மதுரை, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட பிற இடங்களில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போதைய அறிவிப்பின் முக்கிய விவரங்கள் வருமாறு:
ஜோஹோவில் தற்போது டெக்னிக்கல் சப்போர்ட் இன்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு சம்பந்தபப்ட்ட பிரிவில் 0 - 7 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம். அதன்படி இப்போது தான் கல்லூரி படிப்பை முடித்தவர்களுக்கும் விண்ணப்பம் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதோடு சில முக்கிய தகுதிகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி விண்ணப்பத்தாரர்கள் ITSM கான்சென்ட்ஸ் மற்றும் மார்டன் ஐடி மேனேஜ்மென்ட் பற்றி அறிந்து வைத்திருக்க வேண்டும். அதேபோல் விண்டோஸ், மாக் (Mac), லினக்ஸ் ஓஎஸ் அப்ளிகேஷன்ஸ் என்ட்பாயிண்ட் செக்யூரிட்டி, ஐடி ஆபரேஷன்ஸ், சப்போர்ட் மேனேஜ்மென்ட் டூல்ஸ், நெட்வொர்க்கிங்கில் அடிப்படை விஷயங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
அதேபோல் EDR, SOC, SCCM, Intune, AV மற்றும் எண்ட்பாயிண்ட்/மொபைல் டிவைஸ் மேனேஜ்மென்ட் உள்ளிட்டவற்றை தெரிந்து வைத்திருந்தால் அது பிளஸ் பாயிண்ட்டாகும். மேலும் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். இந்த பணிக்கு 2026ம் ஆண்டில் கல்லூரி படிப்பை முடிப்பவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம். மற்றவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
விண்ணப்பம் செய்ய ஜூலை 31 கடைசி நாளாகும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அன்றைய தினத்துக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு இண்டர்வியூவுக்கு அழைக்கப்படுவார்கள்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்த விவரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் தகுதி உள்ளிட்டவற்றின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. அதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் கோவையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா?












Click it and Unblock the Notifications