புடலங்காயை கண்டால் பாம்பை கண்டது போல் குழந்தைகள் ஓடுகிறார்களா? இனி ஸ்னேக்கார்டில் ரிங் செய்யுங்க
சென்னை: புடலங்காயை கண்டால் பாம்பை கண்டது போல் குழந்தைகள் ஓடுகிறார்களா, இனி இப்படி செய்து தாருங்கள், மீண்டும் மீண்டும் கேட்பார்கள்.
புடலங்காய்- நீர் காய்கறிகளில் ஒன்று. இதை வைத்து பொரியல், கூட்டு செய்யலாம். ஆனால் இந்த காயை குழந்தைகள் விரும்ப மாட்டார்கள். பொதுவாக குழந்தையாக இருக்கும் போதே சில காய்களை அவர்களுக்கு பழக்கப்படுத்தினால்தான் பெரியவர்கள் ஆகும் போது அந்த காயை அவர்கள் விரும்பி சாப்பிடும் நிலைக்கு கொண்டு செல்லலாம்.
இல்லாவிட்டால் என்னதான் செய்தாலும் புடலங்காயை வாங்கி சமைக்கவே முடியாத நிலை ஏற்படும். குழந்தைகளுக்கு ரசம் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள ஒரு ஸ்னேக்கார்டு ரிங் எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
புடலங்காய்- 2 எண்ணிக்கை
மைதா மாவு- 100 கிராம்
சில்லி பிளேக்ஸ்- 1 டீஸ்பூன்
ஓரிகனோ - 1 டீஸ்பூன்
மிளகுத் தூள்- 1 டீஸ்பூன்
கொத்தமல்லி தழை - அரை கைப்பிடி
பூண்டு- 4 பல்
தண்ணீர், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
ரொட்டித் தூள்- சிறிது

செய்முறை
புடலங்காயை உள்ளே உள்ள சதை பகுதியை எடுத்துவிட்டு ரவுண்ட் ரவுண்டாக கட் செய்து கொள்ள வேண்டும். பிறகு சிறிது மாவை தூவி கிளறி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் மீதமுள்ள மைதா, சில்லி பிளேக்ஸ், ஓரிகனோ, மிளகுத்தூள், கொத்தமல்லி தழை, உப்பு, நசுக்கிய பூண்டு, தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
பின்னர் புடலங்காய் வளையங்களை ஒவ்வொன்றாக மாவில் தோய்த்து ரொட்டித் தூளில் நன்றாக புரட்டி எடுத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். இதை தயிர் சாதத்திற்கும் தொட்டுக் கொள்ளலாம். குழந்தைகளும் இது போல் செய்து கொடுத்தால் மறுக்காமல் சாப்பிடுவார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications