Kollu Rasam.. கொழுப்பை குறைக்கும்.. இதயத்தை பாதுகாக்கும்.. கொள்ளு ரசம் செய்வது எப்படி?
சென்னை: உடலுக்கு ஆரோக்கியத்தை ஏற்படுத்தும் கொள்ளு ரசம் குறித்து பார்க்கலாம்.
இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்துவனுக்கு கொள்ளு என்பார்கள். எள்ளை எள்ளு சாதம், எள்ளு பொடி, எள்ளுருண்டை உள்ளிட்டவைகளை செய்வது வழக்கம். ஆனால் கொள்ளை வைத்து என்னென்ன செய்வது என்பதை பார்ப்போம்.
கொள்ளை எப்படி செய்வது என தெரியாமல் நிறைய பேர் அதை வாங்கத் தயங்குவார்கள். ஆனால் இந்த கொள்ளை வைத்து நல்லதொரு ரசம் செய்து சாப்பிடலாம். அந்த வகையில் கொழுப்பை கரைப்பதில் கொள்ளுக்கு சக்தி உண்டு. இதில் நிறைய மருத்துவ பலன்களும் உள்ளது. இந்த கொள்ளை எப்படி ரசம் வைத்து சாப்பிடுவது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்
- கொள்ளு- 100 கிராம்
- சீரகம்- 1 ஸ்பூன்
- மிளகு- 1 ஸ்பூன்
- தனியா- அரை ஸ்பூன்
- கருவேப்பிலை- சிறிது
- கொத்தமல்லி தழை- சிறிது
- பூண்டு- 5 பல்
- தக்காளி- 1
- புளி- சிறிது
- உப்பு - தேவையான அளவு
- கடுகு, மஞ்சள் தூள், பெருங்காயம், எண்ணெய் - சிறிதளவு
செய்முறை: முதலில் கொள்ளை எடுத்து சுத்தம் செய்து அதை ஒரு வாணலியில் போட்டு லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு வறுத்த கொள்ளை மிக்ஸியில் போட்டு கொர கொரப்பாக பொடித்துக் கொள்ள வேண்டும்.
தக்காளி, பூண்டு, மிளகு, சீரகம், தனியா ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து அரைக்க வேண்டும். இவை எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொண்டு புளி கரைசலை ஊற்றிக் கொள்ள வேண்டும். பிறகு 3 டம்ளர் அளவிற்கு தண்ணீரை ஊற்றி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொள்ளலாம்.
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய், கறிவேப்பிலை போட்டு , பெருங்காயம் சேர்த்து தாளித்து விடவும். பிறகு ரசத்திற்கு கரைசலை போட்டு ஊற்றி நுரைத்து வந்ததும் அதில் சிறிது தண்ணீர் சேர்த்து வைத்தால் கொள்ளு ரசம் தயார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications