குழந்தை நீதி கதைகள்: சாகசம் காட்டும் கடல் கன்னிகள்.. கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட்..
சென்னை: Kids story in Tamil: ஹாய் சுட்டிஸ், எல்லாரும் எப்படி இருக்கீங்க.. விடுமுறை முடிய போகுதுனு கவலையா இருக்கீங்களா, இல்ல நண்பர்களை பாக்க போறோம்னு ஹாப்பியா இருக்கீங்களா. சரி இந்த வாரம் என்ன கதை படிக்க போறோம்னு தெரியுமா, சொல்றேன் வாங்க..
ஒரு அழகான தீவு இருந்தது. அதன் பெயர் ஹாம்பிஸ். மிகவும் அருமையான அந்த தீவின் அடியில் சில கடல் ராஜ்ஜியங்கள் இருந்தன. ஒவ்வொரு ராஜ்யங்களிலும் கடல் வாழ் உயிரினங்கள் இருந்தன. அங்கு மெர்மைட்களும் வாழ்ந்து வந்தன. இதில் 5 நண்பர்கள் மிகவும் துறு துறுன்னு இருந்தார்கள். அதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை இருந்தது. இவர்கள் அடிக்கடி கடலை விட்டு வெளியே வந்து மற்ற கடல்கள், தீவுகள் என சுற்றி வருவார்கள்.

அவர்கள் சென்ற இடங்களில் எல்லாம் எதாவது அட்வென்சர் நடக்கும். அப்படித்தானே ஒருநாள் அருகில் உள்ள ராஜ்யத்தில் அவர்களது தோழியான ஏரியலை பார்க்க செல்லலாம் என முடிவெடுத்தார்கள். அவர்கள் ராஜ்யத்தில் இருந்து புறப்பட்டு சென்று கொண்டிருக்கும் போது மிக பெரிய அலை வந்தது. அந்த அலையை கண்டதும் மரீனா சந்தோஷத்தில் துள்ளி குதித்து கடலின் மேற்பகுதிக்கு சென்றாள். மற்றவர்கள் அவளை தடுத்தனர். போகாதே மரீனா அது மிகவும் கடினமான அலையாக தெரிகிறது என்று அழைத்தும் காதில் வாங்காமல் சென்றாள். தோழியாயிற்றே தனியே விட முடியாமல் அவர்களும் ஆபத்து என தெரிந்தே பின் சென்றார்கள்.
அலையின் ஆக்ரோஷம் அதிகமாக இருந்ததால் அவர்கள் அலையில் அடித்து செல்ல பட்டார்கள். ஒரு இருட்டான ஆழமான பள்ளத்தாக்கு போல் இருந்தது. அவர்கள் அங்கு மயங்கி விழுந்து கிடந்தனர். மயக்கம் தெரியவே முழித்து பார்த்தால் அந்த இடம் மிகவும் விசித்தமாக இருந்தது. அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என அவர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை. இவர்கள் அனைவரும் பல கடல்களை தாண்டி பயணித்துள்ளார்கள். ஆனாலும் இது அவர்களுக்கு ஒரு சவாலான பகுதியாக இருந்தது. அவர்கள் நீந்தி கொண்டே அங்கு இருக்கும் இடங்களை பார்வையிட்டார்கள்.
அங்கிருந்த பவள பாறைகள் தங்களது பல வண்ணங்களை இழந்து காணபட்டது. அக்வா விற்கு இதை பற்றியெல்லாம் அத்துப்பிடி, அவள் பவள பாறைகள் அவ்வளவு எளிதில் வண்ணங்களை இழக்காது என்றாள். லானா, ' அது எப்படி , பவள பாறைகளுக்கு வயதாகி இருக்கலாம் அதனால் கூட நிறங்கள் மாறியிருக்கலாம் என்றாள். டெல்ஃபீன், ' ஆமாம் அப்படித்தான் தோன்றுகிறது' என்றாள். அக்வா தொடர்ந்தாள் ,' அப்படியெனில் பாறைகள் மேல் இருக்கும் பாசிகளை கூட காணோமே என்று சந்தேகத்தை வைத்தாள். வெளியில் இருந்து சூரியன் வெப்பம் தாக்கி இப்படி ஆகிவிட்டது என்று சொன்னால் கூட , இங்கு இருக்கும் கடல் தண்ணீரும் சூடாக இருக்க வேண்டும் அப்படி இல்லை. ஆகையால் இங்கு ஏதோ ஒரு பிரச்சனை இருக்கிறது என்றாள்.
சிந்தித்தபடியே , அங்கிருந்து நீந்த ஆரம்பித்தார்கள். அப்போதுதான் அவர்களுக்கு புரிந்தது அந்த இடமே வண்ணங்கள் இல்லாமல் இருந்தது. அவர்களுக்கு ஏதோ தவறாக நடப்பதுபோல் தெரிந்தது. அப்படியே நீந்தி கொண்டே அந்த இடத்தில் இருந்து தப்பிக்கும் வழியை தேடி அலைந்தார்கள். அவர்கள் போகும் வழியில் யாரோ அழுவது போல் சத்தம் கேட்டது. சத்தம் கேட்ட திசையில் மரீனா நகர்ந்தாள். அவள் பின்னாடியே மற்றவர்களும் நீந்தி சென்றார்கள். அங்கு ஒரு குட்டி கடல் குதிரை அழுது கொண்டிருப்பதை பார்த்தார்கள்.
அக்வா, அதனிடம் ஏன் அழுகிறாய் என்னவாயிற்று என்று கேட்டாள். அதற்கு குட்டி கடல் குதிரை என் பெயர் பபிள்ஸ், எங்கள் ராஜ்யம் மிகவும் அழகாக இருந்தது. இங்கு ஒரு மரகத நாணயம் இருந்தது. அதன் ஒளியால் தன எங்கள் ராஜ்ஜியமே ஜொலித்தது. ஆக்டோபஸ் வடிவில் இருந்த அந்த கடல் சூனியக்காரி அதை திருடி சென்று விட்டாள். அவளிடம் இருந்து எங்கள் ராஜ்ஜியத்தை மீட்க முடியவில்லை. தயவு செய்து உதவுங்கள் என்று சொன்னது. அவர்களும் பபிள்ஸ் இடம் எங்களுக்கு வழியை காட்டு என்று சொன்னார்கள். அதுவும் அவர்களை அந்த இடத்திற்கு கூடி சென்றது.

அது ஒரு குகை போன்று இருந்தது. அதை அவர்களால் திறக்க முடியவில்லை. அருகில் லிவர் போல இருந்ததை லைலா இழுத்தாள்.அந்த கத கதவு சிறிதுதான் திறந்தது. மரீனா சட்டென உள்ளே நுழைந்தாள். உள்ளே இருந்த இன்னொரு லிவரை இழுத்தாள் அது திறந்தது. அந்த குகை பார்ப்பதற்கே பயங்கரமாக இருந்தது. இன்னொரு கதவு இருந்தது. அது மிகவும் கடினமாக இருந்தது. அதை உடைத்து தான் செல்ல வேண்டும் என்பது போல் இருந்தது. டெல்ஃபீன் அதை ஒரே மிதியில் உடைத்தாள். அனைவரும் நீந்தி உள்ளே சென்றார்கள். அந்த கொடிய சூனியக்காரி அந்த மரகத நாணயம் அருகில் படுத்து பாட்டு படி கொண்டிருந்தாள். இவர்கள் வருவதை முன்கூட்டியே உணர்ந்து விட்டாள் அவள்.
அவளிடம் 5 பேரும் சண்டையிட்டார்கள். இறுதியில் மரகத நாணயத்தி எடுத்து கொண்டு ராஜ்யத்தை நோக்கி புறப்பட்டார்கள். அதன் சரியான இடத்தில அதை பொருத்தினார்கள். ராஜ்ஜியத்தின் தலைமை அதிகாரி, இந்த ராஜ்யமே உங்களுக்கு கடமை பட்டுள்ளது. இன்று போல் எப்போதும் ஒற்றுமையாக இருங்கள். அதுவேய உங்கள் பலம் என்றார். அவர்களும் புறப்பட்டு அவர்கள் தோழியான ஏரியலை பார்க்க சென்றார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications