குழந்தை நீதி கதைகள்: மது செய்த முட்டாள்தனம்.. என்ன ஆச்சு தெரியுமா?
சென்னை: Kids story in Tamil: ஹாய் குட்டிஸ், எப்படி இருக்கீங்க. விடுமுறை எல்லாம் எப்படி போகுது. சரி லீவு நாட்களில் பொழுதுபோவதற்காக என்ன செய்றீங்க. ஒன் இந்தியாவில் உங்க போட்டோ இடம்பெற ஒரு வாய்ப்பு இந்த கோடை விடுமுறையில் கிடைச்சிருக்கு தவற விடாதீங்க. சரி இன்னைக்கு ஒரு முட்டாள் செய்த காரியத்தால் என்ன நிகழ்ந்தது என்று பார்க்கலாம்.
மது அந்த கிராமத்தில் ஒரு எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வந்தான். அவன் மனைவி அவனை எப்போதும் திட்டி கொண்டே இருப்பாள். ஏனெனில் மது ஒரு முட்டாள். எந்த செயலையும் அவனாக செய்ய மாட்டான். ஒருவர் சொல்வதை அப்படியே கேட்டு செய்து விடுவான். அது சரியா, தவறா என யோசித்து அவன் செயல்பட்டது இல்லை. இதற்காகவே மனைவியிடம் அதிகமாக திட்டு வாங்குவான்.

ஒருநாள் அவனுடைய நாய் இருந்த ஒரு பழைய கூண்டில் முயல் குட்டி இருந்ததை பார்த்தான். அதை பெரிதாக அவன் பாதுகாக்கவில்லை என்றாலும் அதற்கு தேவையான உணவை தவறாமல் கொடுத்து வந்தான். அதற்கும் மனைவி அவனை திட்ட தான் செய்தாள்.
ஒருநாள் மது அந்த முயலை தூக்கி கொண்டு நகரத்தில் வலம் வர, அங்கு ஒரு இடத்தில செல்ல பிராணிகளுக்கு போட்டிகள் நடைபெறுவதை பார்த்தான். முட்டாள் மதுவிற்கு தானாக ஒரு யோசனை வந்து தனது முயலை அதில் கலந்து கொள்ள வைத்தான்.
சும்மா ரோட்டில் போறவனுக்கு அடிச்சது யோகம் என்பதுபோல, அந்த போட்டியில் கலந்துகொண்ட முயலுக்கு பல விதங்களில் பரிசுகள் குவிந்தன. அவற்றை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றவனுக்கு இன்னும் அதிகமாக திட்டுதான் விழுந்தது. ஏனெனில் அதில் எதுவுமே மனைவிக்கு உபயோக படுமாறு இல்லை.
இது ஒருபக்கம் இருக்க முட்டாள் மதுவின் முயலை பற்றி ஊரெல்லாம் பேச தொடங்கினார்கள். ஒன்னும் செய்யாமல் பெரியளவில் ட்ரெண்ட் ஆனான் மது. அவனது முயலை பார்த்தவர்கள், இதுவா பரிசுகளை வென்றது, இப்படி அழுக்காக இருக்கிறதே என பார்த்து விட்டு சென்றார்கள்.
மதுவுக்கு அதிர்ஷ்டம் விடாமல் அடித்தது எங்கு சென்றாலும் பரிசுகளை குவிக்க ஆரம்பித்தது அந்த முயல். ஆனால் எதுவும் பணமாக இல்லை. சான்றிதழ்கள், மெடல்கள் மட்டுமே கிடைத்தன. இப்படியாக இருக்க மதுவின் நண்பர்கள் அவனை காண வீட்டிற்கு வந்தார்கள். முயல் இருக்கும் இடத்தை பார்த்துவிட்டு என்னடா இப்படி அழுக்கான, உடைந்து போய் இருக்கும் நாய் கூண்டிற்குள் விட்டிருக்கிறாய். முதலில் முயலுக்கு நல்லதாக ஒரு கூண்டு வாங்கலாம் என்று ஒருவன் சொல்ல தச்சனை தேடி செல்கிறார்கள்.
இருப்பதிலே நல்ல மர கூண்டாக முயலுக்கு வாங்குகிறார்கள். தச்சரிடம் வீட்டுக்கு அனுப்புங்கள் நான் பணம் கொடுக்கிறேன் என்று சொல்ல அவரும் கொடுத்து அனுப்புகிறார். இப்போது முயலுக்கு உணவு வைக்கும் தட்டு ரொம்ப அழுக்காக பழையதாக உள்ளது. அது பெயர் போட்டு வெள்ளியில் வாங்கலாம் என்று இன்னொரு நண்பன் சொல்ல அதையும் வாங்கி வருகிறான்.
முயல் படுப்பதற்காக மெத்தை, அதை சுத்தம் செய்வதற்காக வாரம் ஒருமுறை ஆல் என அனைத்திற்கும் செலவு செய்ய வைக்கிறார்கள். நண்பர்கள் பேச்சை கேட்டு பணம் இல்லை என்பதை மறந்து எல்லாத்தையும் வீட்டிற்கு வர வைக்கிறான். வீட்டிற்கு வந்த பொருட்களின் விலை அவன் கையில் இருப்பதை தாண்டி அதிகமாக தேவைப்பட்டது. மனைவியிடம் கேட்க, இவன் முதல் என்பதை அறிந்த மனைவி குடுக்க மறுத்துவிட்டாள்.
பின்னர் கடன் வாங்கி அதையெல்லாம் சரி கட்டி அடுத்த போட்டிக்கு தயாரானான் மது. முயலை அழைத்து கொண்டு செல்ல, அவனது முயலுக்கு ஒரு பரிசுமே கிடைக்கவில்லை. அதிர்ச்சியான மதுவிற்கு துக்கம் தொண்டையை அடைத்தது. ஏன் பரிசுகள் கிடைக்கவில்லை என யோசித்து கவலையில் மூழ்கினான்.
அப்போது நண்பர்கள் வந்து, முயல் வெற்றி பெற்ற சான்றிதழ்களை கேட்க கொடுத்தான் மது. அதில் மிகவும் மோசமாக வளர்க்கப்படும் செல்ல பிராணி என்ற விருதை பெற்றுள்ளது இந்த முயல். மொத்தமாக அதிர்ச்சியான நண்பர்கள். நீ முட்டாள் தான் ஆனால் எந்த அளவுக்கு என்பதை இப்போதுதான் பார்க்கிறோம் என அவனை திட்டி சென்றனர்.












Click it and Unblock the Notifications