குழந்தை நீதி கதைகள்: சோதனை வரலாம்.. ஆனா அதுக்காக இப்படியா? டாம்க்கு என்னாச்சு தெரியுமா..
சென்னை: Kids story in Tamil: ஹலோ சுட்டீஸ், எப்படி இருக்கீங்க.. எல்லோரும் தேர்வுக்கு தயாராகிட்டு இருப்பீங்க தெரியும். மனதை தளரவிடாமல் நல்லபடியாக தேர்வை எதிர்கொள்ளுங்கள். வாழ்க்கையில் நடக்கும் எல்லாவிதமான நிகழ்வுகளுக்கும் பின்னால் ஏதோ ஒரு காரணம் இருக்கும் அது நல்லதாகவே இருக்கும் என்பதை நம்ம டின்னி டாம் எப்படி நமக்கு சொல்லியிருக்காரு பார்ப்போமா..
அது ஒரு அழகிய ராஜ்ஜியம் அங்கு அரசர் நன்றாகவே ஆட்சி செய்து வந்தார். அவருக்கு எதோ ஒரு கவலை அவரது மனம் எல்லாம் வாட்டி வதைக்க அமைச்சர்களோ அதை சரி செய்வதற்காக பல முயற்சிகளை எடுக்கிறார்கள், எதுவும் வேலைக்கு ஆகவில்லை.

அதே ராஜ்ஜியத்தின் ஒரு ஓரத்தில் ஒரு ஏழ்மையான தம்பதிகள். வரும் சிறிய வருமானத்தில் அன்றாடம் வாழ்ந்தாலும் அவர்களுக்கு ஒரு குழந்தை இல்லை என்ற வருத்தம் இருந்து கொண்டே இருந்தது. அன்றைக்கு ஒருநாள் ஒரு வயதான முதியவர் இவர்கள் வீட்டின் முன் நின்று யாசகம் கேட்டார். தம்பதிகளுக்கோ வீட்டில் கொஞ்சம் தான் உணவு இருக்கிறது என்ன செய்ய என்று கவலை, இருந்தாலும் அவரை உள்ளே அழைத்து உபசரிக்க ஆரம்பித்தனர்.
அந்த முதியவர், கொடுத்த உணவை வயிறார சாப்பிட்டுவிட்டு உங்கள் முகத்தில் ஒரு கவலை இருக்கிறதே என்று கேட்டார். அவர்களோ குழந்தை இல்லை என்பது எங்களை மிகவும் வாட்டுகிறது என்றார். என் விரல் அளவிலாவது ஒரு குழந்தை கிடைத்தால் நான் உயிரை விட மேலாக பார்த்துகொள்வேன் என்றனர் தம்பதிகள். இதை கேட்டுக்கொண்ட முதியவர் ஏதும் சொல்லாமலே சென்று விட்டார்.
மீதம் உணவு ஏதும் இல்லையென்றாலும் மன நிம்மதியுடன் தம்பதிகள் அந்த இரவை கழித்தனர். மறுநாள் விடிந்தது. அவர்கள் வீட்டில் ஏதோ குழந்தை அழும் சத்தம் கேட்டது. வீடெல்லாம் இருவரும் தேடுகிறார்கள், சத்தம் மட்டுமே கேட்கிறது, எங்கிருந்து வருகிறது என அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. சத்தம் கேட்டுக்கொண்டே இருக்க முதியவர் சாப்பிட்டு வைத்த பாத்திரத்தில் வருவதை உணர்ந்தார்கள். அவர்கள் கேட்டபடியே விரல் அளவில் ஒரு ஆண் குழந்தை சத்தம் போட்டு அழுகிறது. தம்பதிகள் குழந்தை கிடைத்த மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கிறார்கள்.
அவனுக்கு டாம் என பெயர் வைத்து அன்பாக பார்த்துக்கொள்கிறார்கள். டாம் வளர்ந்தாலும் அவன் அதே விரல் அளவில் மட்டுமே இருக்கிறான். இருந்தாலும் அவனை மகிழ்ச்சியாக வீட்டுக்குள் வைத்தே பார்த்து கொள்கிறார்கள். டாம் ஊரை சுற்றி பார்க்க ஆசைப்படுகிறான். அவனது அம்மா உலகம் ரொம்ப ஆபத்தானது மகனே என்று சொல்கிறார். ஆனாலும் டாம் அந்த ஆசையை விடவில்லை. ஒருவழியாக யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறுகிறான்.
அவன் நடந்து செல்ல செல்ல, உலகம் பெரிதாக அழகாக அவனுக்கு தெரிகிறது. அதே சமயம் அவன் அம்மா சொன்னது போலவே ஆபத்து நாய் உருவத்தில் துரத்துகிறது. நாய் துரத்த டாம் ஓட, ஒரு ஆற்றின் கரையில் மறைந்து கொள்கிறான். நாயும் காத்திருந்து போய் விடுகிறது. அப்பாடா என பெருமூச்சு விட அடுத்த ஆபத்து காற்று ரூபத்தில் வந்து அவனை தூக்கி வாரி ஆற்றில் போடுகிறது.
அவ்வளவுதான் போச்சு என நினைக்க, டாம் ஒரு பெரிய மீனின் வாயில் விழுகிறான். வேறென்ன முடிந்தது என்று என்னும் நிமிடத்தில் மீனவன் வலையை ஆற்றில் வீச மீன் சிக்கி கொள்கிறது. நல்ல பெரிய மீன் என அதை அரசருக்கு எடுத்து செல்கிறான் மீனவன்.
உயிரை கையில் பிடித்து கொண்டு, டாம் இருக்க அரசவை சமையக்காரன் மீனை வாங்கி, நல்ல சத்தான மீன் அரசருக்கு இன்று இதை செய்து கொடுத்து அசத்த வேண்டும் என எண்ணுகிறான். பெரிய கத்தியை வைத்து ஒரு போடு, ஒரு இன்ச் கேப்பில் டாம் தப்பித்து வெளியில் குதிக்கிறான். சமையக்காரன் இது என்னடா புதுசா ஒன்னு உயிரோட ஓடுதே என பிடிக்க, டாம் அங்கிருந்து ஓடி எலி பொந்திற்குள் சிக்குகிறான்.
சரிதான் சிக்குனாண்டா என்பது போல மாட்டிக்கொண்ட டாம்மிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. பொந்திற்குள் இருந்த எலி அவனை பார்த்து யார் நீ என்றது. டாம் மொத்த கதையும் சொல்ல, சரி உன்னை வீட்டுக்கு நான் கூட்டிக்கொண்டு போகிறேன் என சொன்னது. அம்மாவை பார்க்க போகிறோம் என்ற சந்தோஷத்தில் டாம் இருக்க, அடுத்த சோதனை இரு இரு நான் காத்திருக்கிறேன் என்பது போல இருந்தது.

எலி அவனை முதுகில் உக்காரவைத்து அரசவையை விட்டு வெளியேற இங்கும் அங்கும் ஓடியது. டாம் என்னை இறுக்கமாக பிடித்துக்கொள் என்றது எலி. அவனும் அதன் ரோமங்களை பிடித்து கொண்டான். பின்னாடியே வந்தது பாருங்க அரசவையில் வளரும் பூனை. நமக்கு இன்னைக்கு நல்ல வேட்டை என எலியை துரத்த, எலி ஒரே ஜம்ப். நேராக அரசவையில் அமர்ந்திருந்த அரசரின் தாடியில் ஒட்டினார்கள்.
எலி அவனை முதுகில் உக்காரவைத்து அரசவையை விட்டு வெளியேற இங்கும் அங்கும் ஓடியது. டாம் என்னை இறுக்கமாக பிடித்துக்கொள் என்றது எலி. அவனும் அதன் ரோமங்களை பிடித்து கொண்டான். பின்னாடியே வந்தது பாருங்க அரசவையில் வளரும் பூனை. நமக்கு இன்னைக்கு நல்ல வேட்டை என எலியை துரத்த, எலி ஒரே ஜம்ப். நேராக அரசவையில் அமர்ந்திருந்த அரசரின் தாடியில் ஒட்டினார்கள்.
டாம் தனது பெற்றோரின் நிலையை கூறினான். அரசர் அவர்களையும் எனது அரசவை மாளிகையில் தங்க வைக்கிறேன் நீ என்னுடன் இருப்பாயா என்று கேட்க டாம் ஒத்துக்கொண்டான். டாம் செய்த செயல், அவனின் முயற்சி அரசரை உயிர்ப்புடன் வாழ வழி காட்டியது. அவரும் தனது மனக்கவலையை ஓரம் வைத்தார். அரசருடன் உலகத்தை சுற்றி பார்த்துக்கொண்டே, டாம் தனது பெற்றோருடன் சந்தோசமாக வாழ ஆரம்பித்தான்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications