குழந்தை நீதி கதைகள்: ஓ!.. இதுதான் வாயகொடுத்து புண்ணாக்குறதா!.. ஆமையும் அன்னங்களும்
சென்னை: Kids story in Tamil: ஹலோ குட்டீஸ், நாளுக்கு நாள் வெயிலோட தாக்கம் அதிகமா இருக்குள்ள. குளம், குட்டை எல்லாத்துலயும் நீர் வறட்சி ஆயிருக்கும். அதைமட்டுமே நம்பி இருக்கிற பறவை விலங்குகள் எவ்ளோ கஷ்டப்படுவாங்க. அதைப்பத்தி ஒரு குட்டி கதை சொல்றேன் வாங்க.
ஒரு ஊர்ல அழகான குளம் ஒன்னு இருந்துச்சு. அங்க நிறைய பறவையினங்கள் வாழ் உயிரினங்கள் சந்தோசமா இருந்தன. அதே இடத்தில ஒரு ஆமையும் ரெண்டு அன்னப்பறவைகளும் நண்பர்களாக இருந்தன. மிகவும் மகிழ்ச்சியாக சுற்றி திரிந்தன. வழக்கம்போல கோடைக்காலம் வந்துச்சு. இந்த முறை நீர்வறட்சி அதிகமானதால் குளம் வற்ற தொடங்கியது. அங்க இருந்த உயிரினங்கள் எல்லாம் இடம்பெயர தொடங்கின. ஒரு கட்டத்துல குளம் முழுவதும் வற்ற தொடங்கியது. அன்னப்பறவைகள் கவலையாக இருந்தன. அப்போ அங்க வந்த ஆமை "நண்பா கவலைப்படாதீங்க. பருவமழை வரும், நம்ம குளத்துல மறுபடியும் தண்ணீர் பெருகும். போன நண்பர்கள் எல்லாம் திரும்ப வருவாங்க. இங்க சந்தோசமா இருக்கலாம்னு" சொல்லுச்சு. அதற்கு அன்னங்கள், "நண்பா உன்னால தண்ணிலும் வாழமுடியும், தரையிலும் வாழமுடியும். ஆனால் எங்களுக்கு அப்படி இல்லையே. நாங்க வேற இடத்துக்கு கண்டிப்பா போக வேணும்னு " சொன்னாங்க. ஆமையோ அப்போ "நீங்க முன்னாடி போங்க. நான் உங்க பின்னாடி வர்றேன்" என்றது. "அட ஆமையே, நீ வேகமா வந்தால் பரவால்ல. நீ வரதுக்குள்ள கோடைக்காலமே முடிஞ்சுரும்னு சொன்னாங்க. அதற்கு ஆமை சோகமாக, அப்போ நீங்க போங்க. கோடைகாலம் முடிஞ்சதும் இங்க வாங்க. நா உங்களுக்காக காத்துட்டு இருக்கேன்னு" சொல்லுச்சு. உன்ன விட்டுட்டு எப்படி போவோம். நாம மூணு பேரும் ஒண்ணா போறதுக்கு வழிய பாக்கணும்" என்று கூறியது. மூன்றும் சிந்தனையில் மூழ்கின.

மறுநாள் ஆனது. ஆமை தன்னால் முடிந்த வேகத்தில் அன்னங்களிடம் ஓடி வந்தது. அன்னமோ,"ஆமை நண்பா என்ன இப்படி வர்ற" என கேட்டது. ஆமை சொன்னது, என்னிடம் ஒரு யோசனை உள்ளது. அதை சொல்லதான் வந்துருக்கே",என்று. முதல்ல நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து இதே மாதிரி அழகான குளத்தை கண்டு பிடிங்க. அப்ரோ வந்து என்னையும் கூட்டிட்டு போலாம்னு சொல்லுச்சு" அன்னமோ ஆச்சர்யமாக, "எப்படி நண்பா? என்று வினவியது. "சொல்ற நண்பா. நீங்க சீக்கரம் ஒரு நல்ல குளத்தை கண்டுபுடிச்சுட்டு வாங்கனு" சொன்னது. இரண்டும் புரியாமல் ஆமை நண்பனை நம்பி வேறு குளத்தை பார்க்க சென்றன.
வேறு குளம் பார்ப்பது அன்னங்களுக்கு அவ்வளவுக்கு எளிதாக இல்லை. மனித இனம் தொடர்ந்து காடு, குளம், குட்டைகளை அழித்து வருவதால் உயிரினங்களுக்கான நீர்ஆதாரங்களே மிகவும் குறைந்து விட்டன. இருக்கும் நீர்நிலைகளும் மனிதர்கள் சுற்றுலா சென்று, அங்குள்ள உயிரினங்களை வேட்டையாட முயல்கின்றனர். இதனால், உயிரினங்கள் வாழ்வதற்கே சிரமப்படுகின்றன. சுற்றுலா என்பது நாம் உயிரினங்களை கண்டுகளிப்பதற்கு மட்டுமே. அவற்றை துன்புறுத்துவதற்கு அல்ல என்பதை புரிந்து கொள்ளவேண்டும். சரி நாம் கதைக்கு வருவோம். மிகவும் கஷ்டப்பட்டு அன்னங்கள் ஒரு அழகான குளத்தை கண்டுபிடித்தன. சந்தோசமா தனது நண்பனை கூட்டிவர விரைந்தன.
அன்னங்கள் வருவதற்குள் ஆமை ஒரு அருமையான திட்டம் போட்டு வைத்திருந்தது. ஆமையின் முன் அன்னங்கள் சிரித்த முகத்துடன் வந்தன. "என் அருமை நண்பனே, நாங்க இதைவிட அழகான குளத்தை கண்டுபிடித்திருக்கிறோம். அது எப்போதும் வற்றாத குளமாம். இனி நாம அங்கேயே சந்தோசமா இருக்கலாம். சரி இங்கிருந்து நாம போறது எப்படி? என கேட்டது. ஆமையும் புன்னகையுடன், "நண்பர்களே, ஐடியா ரெடி" என தனது யோசனையை சொல்ல ஆரம்பித்தது. "முதல்ல உங்க கால்ல இந்த குச்சியை வெச்சுட்டு பறக்க தொடங்கணும். நீங்க பறக்க தொடங்கியதும் நான் குச்சியோட அந்த பக்கத்தை வாயில கவ்விப்பே. நானும் உங்களோட பறந்து வருவேன்னு" சொல்லுச்சு. ஆமையோட மூளையை அன்னங்கள் வெகுவாக பாராட்டின. ஆமையும் தன்னுடைய அறிவை எண்ணி பெருமைப்பட்டது. மூவரும் கிளம்ப தயாரானார்கள்.
திட்டம் படியே பறக்க தொடங்கின. அன்னத்திற்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. "மூளைக்கார ஆமை நண்பா, உன்ன வெச்சுட்டு பறக்கிறது எங்களுக்கு கனவு மாதிரி இருக்கு. எல்லாரும் எப்படி பாக்குறாங்க பாரு" என தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தின. மக்களும் மேல பறக்கும் இந்த மூவரையும் பார்த்து ஆச்சர்யப்பட்டார்கள். "அந்த பறவைகள் பாரு தங்கள் நண்பனை எப்படி தூக்கிட்டு போறாங்க .கில்லாடி பறவைகள்னு" ஒருத்தர் சொன்னார். "இந்த பறவைக்கு எவ்வளவு அறிவு பாரேன். ஆமையை தூக்கிட்டு போகுதுனு" இன்னொருவர் சொல்றார். இப்படி பார்க்கும் மனிதர்கள் எல்லாம் அன்னங்களையே பாராட்டினார்கள். இதை கேட்டுக்கொண்டிருந்த ஆமை கோபப்பட்டு பொறுமை இழந்தது. "அது என்னோட ஐடியா டா" என கத்தியது, தன் நிலையை மறந்த ஆமை, வாயிலிருந்த குச்சியில் இருந்து தவறியது. ஆமையோ தன்னுடைய தற்பெருமை எண்ணத்தால் கீழே தரையை நோக்கி விழுந்து கொண்டிருந்தது. அன்னங்களும் தங்கள் நண்பனை இழந்தன. கண்ணீருடன் குளத்தை நோக்கி பறந்தன..
கதை எப்படி இருந்துச்சு குட்டிஸ். ஆமை கொஞ்சம் பொறுமையா இருந்திருந்தா அதுக்கு கிடைக்கவேண்டிய மரியாதையும் கிடைச்சிருக்கும். உயிரோடையும் இருந்திருக்கும். எதிலும் நிதானம் வேண்டும்னு சும்மாவா சொன்னாங்க. நீங்களும் பொறுமையோடு ஒரு செயலை செய்யவேண்டும்.உங்களுக்காக அங்கீகாரம் சரியான நேரத்துல கிடைக்கும். அதே சமயம் நம்மை போல தான் மற்ற உயிரினங்களும் அவைகளுக்கு தீங்கு விளைவிக்கிற மாதிரி நம்ம நடந்துக்க கூடாது. பொறுத்தார் பூமி ஆள்வார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications