குழந்தை நீதி கதைகள்: உஷாரய்யா உஷாரு.. திட்டம் போட்டு தப்பித்த சிட்டுக்குருவி..

Subscribe to Oneindia Tamil

சென்னை: Kids story in Tamil:

ஹலோ குட்டிஸ், எப்படி இருக்கீங்க. நமக்கு எந்த பக்கத்துல இருந்து தொல்லை வரும்னு நமக்கே தெரியாது இல்லையா, ஒருத்தருக்கு உதவ போய் நாமளும் சிக்கலில் மாட்டிப்போம். அதுபோல தான் நம்ம சிட்டுக்குருவிக்கு யாரால தொல்லை அதை எப்படி சரி பண்ணுச்சு என்பதை கதையை படிச்சு தெரிஞ்சிப்போமா..

ஒரு அழகான வீடு அந்த வீட்டை சுத்தி தோட்டம் போல அமைத்திருந்தார்கள். அங்க சின்ன சின்ன குருவிகள், வீட்டு விலங்குகள், பறவைகள் என அந்த தோட்டத்தை சுற்றி வாழ்ந்தன. அங்க தான் நம்ம சிட்டு குருவியும் வாழ்ந்தது. அது தீடிரென ஒரு பாட்டு பாடியது அது என்னனா, " உஷாரய்யா உஷாரு.. ஓரம்ஜாரம் உஷாரு.. குட்டியெல்லாம் உஷாரு.. முட்டையெல்லாம் உஷாரு.. முட்டாள் பீஸ் உஷாரு" இந்த பாடலை கேட்டதும் அங்கிருந்த குருவிகள், அணில்கள் எல்லாம் ஓடின.

Short story for kids in Tamil : The wren and Brown red

சிட்டுக்குருவி குரல் நல்ல கணீர் குரல் என்பதால் அங்கு சுத்தியிருந்த பறவைகள் தங்கள் முட்டைகளை, உணவுகளை என எல்லாத்தையும் பதுக்கின. அவர்கள் ஏன் அப்படி செய்தார்கள் என்று பார்த்தால் பெரிய ப்ரவுன் நிறத்தில் ஆன பெருச்சாளி ஒன்று அதன் பொந்தை விட்டு வெளியே வந்தது. அது வெளியில் வந்தாலே அந்த பறவைகளின் முட்டைகள் அல்லது குஞ்சுகளை எடுத்து கொண்டுபோய் கொன்று சாப்பிட்டுவிடும்.

இதனால் தான் மற்றவர்கள் அனைவரும் ஒன்று கூடி அதற்கு முட்டாள் பீஸ் என பெயர் வைத்து அனைவரையும் எச்சரிக்கை செய்ய முடிவெடுத்தார்கள். அப்போது சிட்டு குருவியின் குரல் சத்தமாக கேட்கும் என்பதால் அதையே சொல்ல சொல்லலாம் என்ற முடிவுக்கு வந்தார்கள். அதன்படி அது வெளியில் வரும்போது இப்படி பாடியது. முதலில் கவனிக்காத அந்த பிரவுன் பெருச்சாளி, எல்லாரும் பதுங்குவதை பார்த்து சுதாரித்தது.

சிட்டு குருவியை பார்த்து, யாரை முட்டாள் பீஸ் என்றாய் என்றது. அதற்கு உங்கள சொல்லுவனா நான் சும்மா பாட்டு பாடினேன் என்றது. அப்படியா, உன் நண்பர்களை எச்சரித்து விட்டால் என்னால் ஒன்றும் செய்ய முடியாதா, சரி உனக்கு ஒரு ஜோடி இருக்குல்ல, என் டார்கெட் இனி நீதான். சீக்கிரம் முட்டை போடு பாத்துக்கலாம் என அங்கிருந்து மீண்டும் தன் பொந்துக்குள் போனது.

சிட்டுக்குருவி பயந்துபோய், அங்கிருந்து தனது கூட்டை வேறு இடத்துக்கு மாற்றியது. ஆனால் பெருச்சாளி அதை கண்டுபிடித்தது. வேற இடத்திற்கு மாற்ற அதையும் கண்டுபிடித்தது பெருச்சாளி, மனசுடைந்து சோர்வாக யோசித்து கொண்டே இருந்த பெருச்சாளிக்கு தனது நண்பர்கள் உதவ முன் வந்தார்கள். நீ ஒரு இடத்தில கூடு காட்டினால் தானே அது கண்டுபிடிக்கிறது. நீ பல இடத்தில கூடுகளை கட்டு அதற்கு நாங்களும் உதவுகிறோம். ஆனால் எது உனது கூடு என்பதை அதனால் கண்டுபிடிக்க முடியாதவாறு எல்லா இடத்திலும் நீ இரு என்றன. சிட்டு குருவி நல்ல யோசனை என்று அதையே செய்தது.

Short story for kids in Tamil : The wren and Brown red

அந்த வீடு இருக்கும் இடத்தில் தனது உண்மையான கூட்டை வைத்து விட்டு தோட்டத்தை சுற்றி பொய்யான கூடுகளை கட்டியது. பெருச்சாளி ஒன்று ஒன்றாக தேட அடுத்த பொய் கூட்டை கட்டியது சிட்டுக்குருவி. தன் துணையுடன் சேர்ந்து முட்டைகளையும் காப்பாற்றியது. தேடி தேடி பெருச்சாளி ஓய்ந்தும் போனது.

இப்போதும் நமது வீடுகளில் சிட்டுக்குருவி வீடு கட்டுவதை பார்த்திருப்போம். ஆனால் அதற்கு பின்னால் இப்படி ஒரு கதை இருக்கு பாத்தீங்களா குட்டிஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+