கொலைகார கொக்கு..சூழ்ச்சியால் பகை வென்ற நண்டு..குட்டி ஸ்டோரி
மீன்கள் எல்லாம் கரையோரத்திற்கு வந்தன. கொக்கு ஒவ்வொரு நடைக்கும் ஒவ்வொரு மீனாகக் கொத்திக் கொண்டு பறந்து சென்றது. சிறிது துாரம் சென்றதும் அந்த மீன்களைக் கொத்தித் தின்றது.
சென்னை: பகையை சூழ்ச்சியால் வெல்லலாம் என்று நம் வீட்டு பெரியவர்கள் கதை வடிவத்தில் சொல்லி வைத்திருக்கிறார்கள். இன்றைய கார்ப்பரேட் கால கட்டத்தில் எத்தனையோ சூழ்ச்சிகளை இளைய தலைமுறையினர் வெல்ல வேண்டும். அதற்கு கொக்கு செய்த சூழ்ச்சியை நண்டு எப்படி கண்டு பிடித்து பகை வென்றது என்ற கதை மூலம் தெரிந்து கொள்ளலாம்.
மீன் என்றால் கொக்குக்கு மிகவும் இஷ்டம். எப்படியாவது ஒற்றைக்காலில் தவமிருந்து மீனை கவ்விப்பிடித்து தின்று விடும்.
வழக்கம் போல ஒரு குளத்திற்கு மீனைக் கொத்தித் தின்னச் சென்றது. அப்போது குளத்தின் கரையில் ஒரு பால் நண்டு கவலையோடு இருந்தது. அந்த நண்டைப் பார்த்த கொக்கு, உனக்கு என்ன கவலை என்று கேட்டது.

என்ன சொல்வேன்! கொலைகாரர்களாகிய வலைகாரர்கள் இந்தப் பக்கத்திலுள்ள ஏரி, குளம் எல்லாம் வலை வீசி ஒரு சின்னஞ்சிறு பொடி மீன் கூட விடாமல் பிடித்துக் கொண்டு போய் விட்டார்கள். நாளைக்கு இந்தக் குளத்திற்கு வரவேண்டும் என்று பேசிக் கொண்டு போயிருக்கிறார்கள். நாளைக்கு வந்து பிடித்துக் கொண்டு போய் சந்தைக் கடைகளிலே வைத்து விற்று விடுவார்கள். இவர்கள் கைகளிலிருந்து தப்புவது எப்படி என்றுதான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்' என்று பால் நண்டு பதில் கூறியது.
அதைக்கேட்ட கொக்கு... மீன்களும் நீயும் உன் இனமும் உயிர் தப்புவதற்கு நான் ஒரு ஐடியா சொல்லட்டுமா என்று கேட்டது. எப்படி?' என்று நண்டு ஆவலோடு கேட்டது.
'எப்படியாவது, அந்த மீன்களையெல்லாம் இங்கே கூட்டிக் கொண்டு வா. நான் ஒவ்வொரு மீனாகத் தூக்கிக் கொண்டு போய் இன்னொரு குளத்தில் விட்டுவிடுகிறேன்' என்றது கொக்கு.
கொக்கு சொன்னதை நம்பிய அந்த நண்டு, மீன்களிடம் போய் இந்த யோசனையைக் கூறியது. எப்படியும் வலைகாரர்களிடமிருந்து தப்பினால் போதும் என்று நினைத்த மீன்கள் நண்டு சொன்ன ஐடியாவிற்கு உடனே ஒப்புக் கொண்டன.
மீன்கள் எல்லாம் கரையோரத்திற்கு வந்தன. கொக்கு ஒவ்வொரு மீனாகக் கொத்திக் கொண்டு பறந்து சென்றது. சிறிது துாரம் சென்றதும் அந்த மீன்களைக் கொத்தித் தின்றது. வயிறு நிரம்பிய பிறகு, கொண்டு போன மீன்களை ஒரு பாறையில் காயப் போட்டு வைத்தது.

கடைசியில் நண்டுதான் மிஞ்சியது. நண்டின் தசையையும் தின்னலாம் என்ற ஆசையோடு, அதையும் கொத்திக் கொண்டு பறந்து சென்றது. கொக்கு பறந்து செல்லும் வழி எங்கும் மீன் முட்கள் தரையில் கிடப்பதை நண்டு கண்டு கொண்டது. கொக்கு செய்த துரோகச் செயலை நண்டு புரிந்து கொண்டது.
மீன்களையெல்லாம் தின்றது போதாமல் நம்மையும் இந்தக் கொக்கு கொல்லத் துணிந்து விட்டது என்று நினைத்த நண்டு.. சூழ்ச்சியை, சூழ்ச்சி யால் தான் வெல்ல வேண்டும். நம்மை இது கொல்லும் முன் இதை நாம்; கொன்றுவிட வேண்டும்' என்று எண்ணியயது. மெல்லத் தன் முன்னங் கால்கள் இரண்டையும் நீட்டி, கொக்கின் கழுத்தை வளைத்துப் பிடித்து நெருக்கியது நண்டு. கழுத்து நசுங்கியதும், கொக்குக் கீழே விழுந்து உயிரை விட்டது.
நண்டு வேறொரு குளத்திற்குப் போய்த் தன் இனத்தோடு சேர்ந்து கொண்டது. என்ன குட்டீஸ்..பெரும் பகையையும் சூழ்ச்சியால் வெல்லலாம் என்பது இக்கதையிலிருந்து தெரிந்து கொண்டீர்களா? இந்த கதை குட்டீஸ்களுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும்தான்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications