தெரியாம சாவு மாலைய மிதிச்சிட்டேனே.. இப்போ என்னைய பாலோ பண்ணி பேய் வீட்டுக்கு வருமேடா!
சென்னை : 90ஸ் கிட்ஸ்களின் குழந்தைத்தனமான நம்பிக்கைகளையும், இப்போது அவர்கள் வாழும் வாழ்க்கையையும் கலாய்த்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நம் நெட்டிசன்கள்.
90ஸ் கிட்ஸ்கள் வாழ்ந்த வாழ்க்கையே வேறு. வீட்டில் பெரியவர்கள் என்ன சொன்னாலும் அதை அப்படியே நம்பியவர்கள் அவர்கள். அதனால்தானோ என்னவோ இப்போது வரை அதே குழந்தை மனதுடன், அடிக்கடி ஏமாந்து போகிறார்கள் ( நாங்க சொல்லலைங்க.. சமூகவலைதளத்துல பேசிக்குறாங்க..).

உப்பைக் கீழே கொட்டினால் கண் இமையினால் அதை எடுக்க வைப்பார்கள் என்பதில் ஆரம்பித்து, யானை அருகில் சென்று, 'முறம் காது.. இடுக்கு கண்ணு' என்று சொன்னால், அது அதனை அப்படியே மனதில் வைத்திருந்து நம்மை பழி வாங்கும் என்பது வரை, அவர்கள் கடந்து வந்த நம்பிக்கைகளை வார்த்தைகளில் சொல்ல முடியாது. மாலையில் விளக்கு வைத்த பின் பாம்பு என்று சொன்னால் பாம்பு வீட்டுக்கு வந்து விடும், சாலையில் நடந்து செல்லும்போது, சாவு மாலையை மிதித்து விட்டால், அந்த பேய் நம் பின்னேயே வீட்டுக்குத் தேடி வந்து விடும் என்ற நம்பிக்கை எல்லாம் வேற லெவல் கற்பனைதான்.
இப்போதுள்ள குழந்தைகளிடம் இதையெல்லாம் சொன்னால், 'அய்யய்ய.. நீ அவ்ளோ மக்காவா இருந்த' என ஒரே வாக்கியத்தில் அசிங்கப்படுத்தி விடுவார்கள். ஆனாலும் அதை உண்மையென நம்பி, பயந்து வாழ்ந்தவர்கள்தான் நம் 90ஸ் கிட்ஸ்கள்.
அதனால்தான், நேரம் கிடைக்கும் போதெல்லாம் 90ஸ் கிட்ஸ்களைக் கலாய்த்து, அவர்களது இதுபோன்ற நம்பிக்கைகளை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து இணையத்தைக் கலகலக்க வைத்து விடுகின்றனர் நம் நெட்டிசன்கள். இப்போதும் அப்படித்தான், "தெரியாம சாவு மாலைய மிதிச்சிட்டேனே.. இப்போ என்னைய பாலோ பண்ணி பேய் வீட்டுக்கு வருமேடா! " என்பது மாதிரியான நினைத்து நினைத்து சிரிக்கும்படியான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான 90ஸ் கிட்ஸ் ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications