
குளிர்காலத்துல முதல்கப் தண்ணீரை ஊற்றும்போது கண்டுபிடிக்கப்பட்டதுதான்.. பிரேக் டான்ஸ்!
சென்னை: மழை விட்டாலும் குளிர்விடவில்லை என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.

நவம்பர் மாதம் ஆரம்பித்து விட்டாலே சென்னை உள்ளிட்ட பல தமிழக நகரங்கள் ஊட்டி, கொடைக்கானல் ரேஞ்சுக்கு ஜில்லென மாறி விடும். திடீர் திடீரென மழை கொட்டித் தீர்க்கும், பிறகு ஒன்றுமே நடக்காத மாதிரி, சூரியன் சுட்டெரிக்கும். இப்படி மாறி, மாறி கிளைமேட் ஒருபுறம் மாறி, நம்மை வாட்டும் என்றால், மற்றொருபுறம் குளிரும் தன் பங்கிற்கு வச்சி செய்யும். காலை மற்றும் மாலையில் குளிர் காற்று உடம்பை நடுங்க வைத்து விடும்.

வீட்டில் இருப்பவர்கள்கூட நிலைமையை சமாளித்து விடலாம். ஆபிஸ் செல்பவர்கள் நிலைதான் கொஞ்சம் பாவம். குட்டிக் குழந்தைகள் குளிப்பதற்கு லீவு விட்டுவிட, பெரியவர்கள் குளிக்கலாமா இல்லை வேணாமா என பாத்ரூமிலேயே உட்கார்ந்து தங்களுக்குத் தாங்களே பட்டிமன்றம் நடத்துவார்கள் இந்த மாதத்தில்.
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களை அடையாளம் காண வழியில்லையே.. இது அநீதி.. விசிக ரவிகுமார் கருத்து!
மழை பெய்தால் அதை வைத்து மீம்ஸ் போட்டு, குளிர் காயும் நம் மீமர்கள், குளிர் அடித்தால் விடுவார்களா? அதை வைத்து மீம்ஸ் மழை பொழிந்து வருகின்றனர்.

இதோ அப்படியாக குளிருக்கு பயந்து தண்ணீர் கை வைக்கலாமா வேண்டாமா என நடுங்குபவர்களை வைத்து நகைச்சுவையாகப் பகிரப்பட்டு வரும் குளிர்கால மீம்ஸ்கள் சில உங்களுக்காக...

