
மத்த11 மாசம் வர்றதும் தெரியல.. போறதும் தெரியல.. நீ வந்தா மட்டும்தான் பீதியா இருக்கு!
சென்னை: மாண்டஸ் புயலால் டிசம்பர் மாதத்தையும் சேர்த்து மீம்ஸ் போட்டு திட்டி வருகின்றனர் நெட்டிசன்கள்.
மற்ற மாதங்களைவிட டிசம்பர் மாதத்திற்கும், நம் மக்களுக்கும் இடையே ஒரு தனிப்பட்ட பந்தம் என்றே சொல்லலாம். பந்தம் என்பதைவிட பயம் என்ற வார்த்தை பொருத்தமானதாக இருக்கும். ஏனெனில் கடந்த காலங்களில் டிசம்பர் நம்மை வைத்து செய்த வரலாறு அப்படி.

அதனாலேயே டிசம்பர் மாதம் என்றாலே மக்களுக்கு, குறிப்பாக சென்னைக்காரர்களுக்கு லேசாக வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்து விடும். இந்த வருடமும் மக்களுக்கு பீதியைக் காட்ட மறக்கவில்லை. மாதம் பிறந்து சில தினங்களிலேயே மாண்டஸ் புயலைக் கொண்டு வந்து விட்டது டிசம்பர்.
இதனால் டிசம்பர் மாதத்தையும், கூடவே புயலையும் சேர்த்து வைத்து மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள். இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...














