வீட்டு மானம் வெளில போகக்கூடாதுனு சொல்றீங்க.. அப்புறம் ஏன் நா அடிச்சா அப்டி கத்துறீங்க!
சென்னை : மனைவிக்கு பயந்த மாதிரியே நடிப்பதில் நம் ஆண்களுக்கு அப்படி ஒரு ஆனந்தம். அதனால்தான் அடிக்கடி அப்படியான மீம்ஸ்களைப் பகிர்ந்து, தங்களது மகிழ்ச்சியை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்கின்றனர்.
வீட்டுக்கு வீடு வாசப்படி என்பது எதற்கு பொருந்துகிறதோ இல்லையோ.. கணவன், மனைவி சண்டைகளுக்கு கச்சிதமாகப் பொருந்தும். வெளியில் என்னதான் அந்நியோன்யமான தம்பதிகளாக காட்டிக் கொண்டாலும், சண்டைகள் இல்லாத வீடுகளைப் பார்க்கவே முடியாது. அப்படி தங்களுக்குள் சண்டையே வருவதில்லை எனக் கூறுபவர்கள் தன் துணையை ஏமாற்றுகிறார்கள் என்பார்கள் பெரியவர்கள்.
பெரும்பாலும் இந்த சண்டைகளுக்கான விதை ஆண்கள் போடுவதாகத்தான் இருக்கும். ஆனால், அதை செடியாக்கி, கொடியாக்கி, பின்னர் ஆலமரமாக்கி விடுவார்கள் மனைவிகள். பின்னர் இந்த சண்டைகள் இரண்டொரு நாளில் முடிந்து விடும். ஆனாலும், இப்படி சண்டை வரும் போது, தன் மனைவி தன்னை அடித்தாள் என சமூகவலைதளப் பக்கங்களில் மீம்ஸ்களைப் பகிர்வதில் ஆண்களுக்கு அப்படியொரு ஆனந்தம்.
அதனால்தான், அடிக்கடி சமூகவலைதளப் பக்கங்களில், கணவன், மனைவி சண்டைகளைப் பற்றிய மீம்ஸ்களும், கணவன், மனைவிக்கு பயப்படுவது மாதிரியான மீம்ஸ்களும் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி விடுகின்றன. இப்போதும் அப்படித்தான், "பொண்டாட்டி எதிர்த்து பேசினா தோலை உரிச்சுடுவேன்னு சொல்லணும்.. அட வெங்காயத் தோலை சொன்னேன் பேபிமா!" என்றும், "வீட்டு மானம் வெளில போகக்கூடாதுனு சொல்றீங்க.. அப்புறம் ஏன் நா அடிச்சா நாலு வீட்டுக்கு கேட்குற மாதிரி அப்படி கத்துறீங்க!" என்பது மாதிரியான மீம்ஸ்களையும் பகிர்ந்து இணையத்தை கலகலக்க வைத்து வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications