காரையே பாலத்துல நிறுத்துறாங்க.. ஆட்டோலாம் தாங்காது.. அடுத்த மழைக்குள்ள படகு வாங்கிடு!
சென்னை: அடுத்த வாரம் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் சொன்னாலும் சொன்னது, உடனே நம் நெட்டிசன்கள் மழை, வெள்ளம், படகு என மீம்ஸ்களைப் பகிர ஆரம்பித்து விட்டனர்.
நவம்பர், டிசம்பர் என்றாலே நம் நெட்டிசன்களுக்கு மழை பற்றிய மீம்ஸ்கள்தான் கொண்டாட்டமாக இருக்கும். நிஜத்தில் மழை பொழிகிறதோ இல்லையோ.. வெள்ளம் வருகிறதோ இல்லையோ.. ஆனால் சமூகவலைதளப் பக்கங்களில் மழை பற்றிய மீம்ஸ்களை வெள்ளம் போய் பாய்ந்தோடச் செய்து விடுவார்கள். அதிலும் சென்னையில் மழை என்றால் கேட்கவே வேண்டாம்.
இந்தமுறை சற்று வித்தியாசமாக மழை சென்னையை மறந்துவிட்டு, மற்ற மாவட்டங்களைப் பதம் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், வரும் வாரத்தில் சென்னை, செங்கல்பட்டு என வடதமிழத்திற்கும் பலத்த மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிறகென்ன இப்போதே மழை, வெள்ளம், படகு என மீம்ஸ்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆரம்பித்து விட்டனர்.
"காரையே பாலத்துல நிறுத்துறாங்க.. ஆட்டோலாம் தாங்காது.. அடுத்த மழைக்குள்ள படகு வாங்கிடு மாணிக்கம்!" என அவர்கள் யோசிக்கும் வேகத்தைப் பார்த்தால், விரைவில் கார் ஷோரூம்களைப் போல், படகு ஷோரூம்களையும் சென்னையில் எதிர்பார்க்கலாம் போல...
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட மழை பற்றிய நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...







-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications